Thursday, June 5, 2008

நோர்வே பேசுவது சமாதானம்; செய்வது ஆயுத ஏற்றுமதி

உலகின் ஆயுத ஏற்றுமதித் துறையில் நோர்வே 7 வது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு நோர்வே பேசுவது சமாதானம் ஏற்றுமதி செய்வது ஆயுதம் என்ற தலைப்பில் ஐ பி எஸ் என்ற இன்டர் பிரஸ் சேவிஸ் நியூஸ் ஏஜென்சி செயதி ஒன்றை வெளியிட்டுள்ளது.


நோர்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சு நீதிப்பிரிவின் ஒழுங்கின்படி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யமுடியாது.

எனினும் இது கடந்த இரண்டு தசாப்த காலமாக உரிய முறையில் பின்பற்றப்படவில்லை.

2007 ஆம் ஆண்டுத் தரவுகளின்படி நோர்வே ஆயுத ஏற்றுமதி மூலம் 425 மில்லியன் டொலர்களை இலாபமாக பெற்றுக்கொண்டது.

இது 2006 ஆம் ஆண்டை விட 18 வீத அதிகரித்த லாபமாகும்.

நோர்வே ஆயுத ஏற்றுமதியில் உலகலாவிய ரீதியில் 3.5 வீத பங்களிப்பை வகிக்கிறது.

நோர்வேயின் பிரதான ஆயுத இறக்குமதி நாடு செக் மக்கள் குடியரசாகும்.

இதனைத்தவிர குர்திஸ் போராளிகளுக்கு நோர்வே ஆயுத ஏற்றுமதியை மேற்கொள்வதாகக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

எனினும் நோர்வே சமாதான முனைப்புகளைக் கொண்டுள்ள இலங்கை; நேபாளம்; பிலிப்பைன்ஸ்; சவூதி அரேபியா; கொலம்பியா போன்ற நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதிகளைச் செய்வதில்லை.

No comments: