Thursday, June 5, 2008

ஒரு நியாயமான கேள்வி


இமாலய வெற்றிகளைக் குவித்து புலிகளை இரணைமடுவிற்குள் முடக்கிய கேடியர் பால்ராஜ் இறந்து போனார். எப்படி இறந்து போனார் என்பது புதிர்.. மாரடைப்பில் இறந்து போனார் என்பது புலிகளின் செய்தி. பால்ராஜின் இறுதி மரியாதையில் பால்ராஜின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் பேழை மூடப்பட்டுள்ளது. மூடிய கண்ணாடிப் பேழையின்மேல் தலைவர் மாலை சாத்துகிறார். மாரடைப்பால் இறந்தவரின் பேழை திறந்து வைக்காததன் காரணம் என்ன? விமானக் குண்டுவீச்சில் இறந்த சேதமடைந்த தமிழ்ச்செல்வனின் பேழை கூட திறந்திருந்த நிலையில் மேதகு மாலை சாத்தினார். மன்னார்ப் பகுதிகளில் ஏற்பட்ட தோல்விகள் தான் பால்ராஜின் மரணத்திற்கு காரணமா? பால்ராஜின் மரணத்தில் வன்னிமக்களுக்குச் சந்தேகமிருப்பதாக வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன. வன்னியில் தரமான கண்ணாடிச் சவப்பெட்டிகள் எப்போதும் தயாராகவே யிருக்கின்றன…


காட் அட்டாக்கா அல்லது காட்டு அட்டாக்கா?
தலைவரை விட்டுப் பிரிஞ்சகேடியர் பால்ராஜ் இன்ட செத்த உடம்பை கண்ணாடிப் பெட்டிக்கை வடிவாக வைச்சு பெரிய எடுப்பு எல்லாம் எடுத்தவே கண்டியளே ஆனா ஓண்டை மட்டும் கூர்ந்து கவனிக்கேக்க கொஞ்சம் சஸ்பிசன்.. அதுதானுங்கோ சந்தேகம் வருகுதுங்கோ அது என்னன்டா தேய்சியத்தலைவர் ஏன்? கண்ணாடிப்பெட்டிக்கு மாலை போட்டவர் பிரிஞ்சகேடியர் பால்ராஜ் இன்ட இறந்த உடம்புக்கு அல்லோ மாலை போடவேணும் பெட்டியை மூடிப்போட்டு ஏன் மூடிக்கு போட்டார் மாலை? காலையில கட்டிலோட காட்அட்டாக் வந்து பிரிஞ்சு போனார் எண்டு அறிவிச்சவே. அப்ப ஏன் மூடினவே? இயற்கையாக இறந்த உடம்பு பழுதுபடாது தானே? காட்டு அட்டாக்கில் அகப்பட்ட உடம்பைத்தான் மூடிவைக்கிறவேயாம். அவையள் எல்லாத்தையும் மூடி மூடி வைச்சுத்தானே அவையின்ட கதையும் முடிஞ்சு போய்க் கொண்டிருக்குது. கடைசியாக இருக்கிற பங்கரும் மண்ணோடு மண்ணாக மூடுப்பட்டு போயிடும்… என்னவோ மலிஞ்சா சந்தைக்கு வரும்தானே? (நன்றி.. ஈழநாசம்)

http://nitharsanam.net/?p=16581

No comments: