Saturday, June 14, 2008

மோகினி விவாகரத்து .. ஊர்வசியும்!


நடிகை மோகினியும், அவரது கணவர் பரத்தும் பரஸ்பரம் விவாகரத்து செய்து கொள்ள தீர்மானித்து குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். இதேபோல நடிகை ஊர்வசியும் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார்.

ஈரமான ரோஜாவே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மோகினி. முதல் படம் ஹிட் ஆனதால் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் போகப் போக வாய்ப்புகள் மங்கவே 2003ம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் இந்தத் திருமணம் ஐந்து ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. சமீபத்தில் இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். இந்தநிலையில் இருவரும் பரஸ்பர விவாகரத்துக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

இன்று காலை குடும்ப நல நீதிமன்றத்திற்கு மோகினியும், பரத்தும் ஜோடியாக வந்து விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதே போல நடிகை ஊர்வசியும் விவாகரத்து கோரி மனு செய்துள்ளார். ஊர்வசிக்கும், மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

மலையாளத்தில் ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ள மனோஜ் தற்போது தமிழில் வில்லனாக நடித்து வருகிறார்.

சில காலத்திற்கு முன்பு ஊர்வசிக்கும், மனோஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், விவாகரத்துகோரி குடும்ப நல நீதிமன்றத்தில் ஊர்வசி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நேற்று நீதிபதி விமலா முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மனோஜுக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டார்.

தன்னை கணவர் மனோஜ் கே.ஜெயன் கொடுமைப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார் ஊர்வசி.

No comments: