Saturday, June 14, 2008

முஷாரப்பை தூக்கிலிடவேண்டும்

பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை தூக்கிலிட வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வெளியே தனது ஆதரவாளர்கள் மத்தியில் நாவஸ் ஷெரீப் இன்று உரையாற்றினார்.
.
கடந்த பிப்ரவரி மாதம் 18ந் தேதி நடைபெற்ற தேர்தலை தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு முஷாரப்பை தாம் வலியுறுத்தி வருவதாக நவாஸ் ஷெரீப் கூறினார்.
மக்களின் தீர்ப்பை முஷாரப் இப்போதாவது ஏற்று கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 1991ம் ஆண்டு தம்மை ஆட்சியிலிருந்து அகற்றிய அப்போதைய ராணுவ தளபதியாக இருந்த அதிபர் முஷாரப் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

முஷாரப்பை தூக்கிலிட வேண்டும் என்று ஆவேசமாக கூறிய நவாஸ் ஷெரீப் கடந்த 1979 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் புட்டோ தூக்கிலிடப்பட்டதை சுட்டிக்காட்டி அரசியல்வாதிகள் மட்டும்தான் தூக்கிலிடப்பட வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது அங்கு கூடியிருந்த நவாஸ் கட்சி தொண்டர்கள் முஷாரப்பை தூக்கிலிட வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.

No comments: