Monday, June 9, 2008

முதலில் குஷ்பு - இப்பொழுது ஸ்ரேயா


ஆங்கில மாத இதழ் ஒன்றின் அட்டைப் படத்தில் நடிகை ஸ்ரேயா மிகவும் கவர்ச்சியாக ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த பிரபல மாத இதழ் மேக்சிம். இந்த பத்திரிகை தென்னிந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தனது முதல் பதிப்பை துவக்கியது. முதல் பதிப்பிலேயே மிகப் பெரும் சர்ச்சையை இது ஏற்படுத்தியது.


அந்த முதல் இதழின் அட்டைப் படத்தில் நடிகை குஷ்பு குறைந்த அளவு மேலாடையுடன் தோற்ற மளிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த குஷ்பு, அந்த புகைப்படத்தில் இருப்பது தான் அல்ல என்றும், வேறு யாரோ புகைப்படத்தை வைத்து தன்னுடைய பெயரை போட்டிருப்பதாகவும் வழக்கு தொடர்ந்தார்.

இதுவரை சினிமாவில் கூட இத்தகைய ஆடைகளை அணிந்திராத வகையில் படுகவர்ச்சியான ஆடைகளை அவர் அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே சிவாஜி படத்தின் 175-வது நாள் வெற்றி விழாவில் முதலமைச்சர் கருணாநிதி அருகில் மிக குறைந்த அளவு ஆடையுடன் ஸ்ரேயா அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்டசபையில் கூட இது பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தென்னிந்திய நடிகை ஒருவர் இந்த அளவு படுகவர்ச்சி போஸ் கொடுத்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments: