Monday, June 9, 2008

ஈழத்தமிழர்களுக்கான பாதுகாப்பை கருணாநிதி வழங்கவில்லை

தமிழை வளர்த்தோம் என்று கூறிவரும் கருணாநிதி, இலங்கைத் தமிழர்களுக்கு எந்த பாதுகாப்பும் கொடுக்கவில்லை. ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான தாக்குதல்களை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இலங்கைக் கடலில் சிங்கள இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களால் தமிழர்கள தினமும் செத்து மடிகின்றனர். கச்சதீவு நம்மிடம் இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.

இலங்கையில் தமிழர்கள் படும் அவலங்களையும், இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றமையும் கண்டும் காணதது போல் இருக்கிறார். தமிழர்களுக்கான பாதுகாப்பை வழங்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை அவர். என்று நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் நடிகர் விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

No comments: