Saturday, June 14, 2008

இலங்கையில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள்

இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும் வடக்கில் இ டம்பெறும் படைநடவடிக்கைகள் குறித்தும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இவர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளான கிறிஸ் கிலாரி, அமிர் லத்தீவ் மற்றும் எல்.ரி.சி. ஜேம்ஸ், ஈ.ஒக்ஸ்லி ஆகியோரே இலங்கையின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக கடந்த புதன்கிழமை கொழும்புக்கு வருகை தந்துள்ளனர்.

அன்றைய தினமே இவர்கள் இராணுவத் தளபதியை சந்தித்து நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள், வடக்கே இடம்பெறும் படை நடவடிக்கைகள், இரு தரப்பு இராணுவ உறவுகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது வன்னியில் படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் தென் பகுதியில் இடம்பெறும் தாக்குதல் சம்பவங்கள் குறித்தும் விளக்கமளித்த ஜெனரல் சரத் பொன்சேகா, விடுவிக்கப்பட்ட பகுதிகளில் படையினர் மேற்கொள்ளும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிக் கூறியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்தும், தற்போது இரு நாட்டு படையினருக்குமிடையிலான பரஸ்பர பரிமாறல் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதுடன் இரு நாடுகளுக்குமிடையில் மேலும் மேலும் கூட்டுப் பயிற்சிகளை அதிகரித்து பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டதாகவும் தங்களது இருநாள் விஜயத்தின் போது அமெரிக்க அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், கடற்படை மற்றும் விமானப் படைத் தளபதிகளையும் சந்தித்துப் பேசியதுடன் சில முக்கிய பகுதிகளுக்கும் விஜயம் செய்துமுள்ளனர்.

Army Chief updates US defence officials on security situation

Two senior officials of the US Department of Defence to make a first hand assessment of the current security and operational situation in the country met Army Commander Lieutenant General Sarath Fonseka at his office in the Army Headquarters.


Army Chief updates US defence officials on security situation

Chris Clary and Amir Latif of the office of US Secretary Defence, accompanied by LTC James E. Oxley, USA, Defence Attache, discussed issues pertaining to the security situation and cordial relations between the US Army and the Sri Lankan Army during this formal meeting on Wednesday.

The Army Commander, giving a detailed account of security developments in Wanni and terror attacks, briefed the delegates on Army's different operational strategies, adopted in the humanitarian mission to liberate the Wanni from LTTE clutches. He pointed out that these steps have helped weaken Tiger terrorists to a greater degree and salvaged many civilians from their grip.

The Commander also outlined measures implemented by area Headquarters for relocation of civilians who desert uncleared areas and reach troops in search of protection and safety.


Army Chief updates US defence officials on security situation

The visiting delegates spoke of the bilateral defence cooperation and exchange programmes between both countries and emphasised the need for further promotion of such cooperation with more training programmes.

During their two-day stay in Sri Lanka they are scheduled to meet the Defence Secretary, Chief of Defence Staff, Navy and Air Force Commanders and visit several area headquarters.

No comments: