"இலங்கை அரசின் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள் எல்லாம் இப் போது எம்மை சுற்றி நிற்கின்றன. எப்போது ஒரு ஆக்கிரமிப்புப் படை மக்கள் செறிந்து வாழும் பகுதிக்குள் நுழைகின்றதோ அப்போது அது தோல்வியை தழுவும் காலம் உரு வாகின்றது. இதனையே அரச படைகள் எதிர்கொள்ளப் போகின்றன." புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரிவுப் பொறுப்பாளர் சி. எழிலன் இவ்வாறு தெரிவித்தார்.
பரந்தனில் நேற்று முன்தினம் நடை பெற்ற "வீர முரசு" நிகழ்வில் கலந்து கொண்டு சிறப் புரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
யாழ்ப்பாணத்தில் புலிகள் தாக்குதலை தொடுத்து, தரையிறங்குவார்கள் என்ற அச்ச உணர்வு இப்போது படைத்தரப்பை கிலி கொள்ளச் செய்துள்ளது. இதனால் யாழ். குடாக்கடலில் தொழிலாளர்கள் மீன் பிடிக்க படைத்தரப்பு தடை விதித்துள்ளது. அத்துடன், ஊரடங்குச் சட்ட நேரத்தை அதிகரித்து மக்களை சொல்லொண்ணா துன்பத்திற்குள்ளாக்கியுள்ளது.
இதனை விட சிங்கள மக்கள் வாழும் பிரதே சங்களில் மக்கள் பெரும் அச்ச உணர்வினை சந்தித்துள்ளனர். இவ்வாறான நிலையில் படைத்தளபதி சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இன்னும் சற்றுத் தூரம் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அன்று தலைவர் பிரபாகரனை அழித்து விட்டதாக இந்திய அரசு அறிவித்தது. ஆனால் அவரை அவர்களால் நெருங்கவே முடியவில்லை. இதேபோன்றதொரு செயற் பாட்டைத்தான் தற்போது சிங்கள மக்களுக்கு இலங்கை அரசு தெரிவித்துக்கொண்டிருக்கிறது.
விடுதலைப்புலிகளின் பலம் முன்பி ருந்ததை விட தற்போது மேலோங்கிக் காணப்படுகிறது. எனவே எமது தலைவர் இலங்கை படைத்தரப்புக்கு பாடத்தை வெகு விரைவில் புகட்டுவார்.
நாம், இதுவரை பெறாத வெற்றி வாய் ப்பை இராணுவம் எமக்கு கொடுத்திருக் கின்றது. அது எவ்வாறு வந்துள்ளது எனில், அரசின் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள் எல்லாம் இப்போது எம்மை சுற்றி நிற்கின்றன என்பதால் ஆகும். என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment