பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகானுக்கு இன்று காலை படப்பிடிப்பு ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் கைமுறிந்தது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் படம் ‘கந்தசாமி’. இதில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா தோன்றுகிறார். சுசிகணேசன் இயக்கும் இப்படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான் நடித்து வருகிறார்.
இன்று காலை மாமல்லபுரம் அருகே கடற்கரையில் மன்சூர் அலிகான் குதிரையில் வேகமாக வருவது போன்று காட்சி படமாக்கப்பட்டது. அப்போது திடீரென குதிரை தலைகுப்புற கவிழ்ந்ததில் அதில் உட்கார்ந்திருந்த மன்சூர் அலிகான் தூக்கி வீசப்பட்டு, அங்கிருந்த கட்டுமரத்தின் மீது விழுந்தார்.
இதில் அவரது வலது கை உடைந்தது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. திருப்போரூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் மன்சூர் அலிகான் அனுமதிக்கப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment