கருப்பையில் வளரும் குழந்தைக்கு உயிர் இருக்கலாம்; வளர்ச்சி இருக்கலாம். ஆனால், பிறக்காத நிலையில், அதை மனித இனத்தை சார்ந்ததாக ஏற்க முடியாது! மும்பை ஐகோர்ட் இப்படி வித்தியாசமான தீர்ப்பு அளித்துள்ளது. மும்பையை சேர்ந்தவர் முருகப்பா வகார்; 1992ல், சாலை விபத்தில் அவரது கர்ப்பிணி மனைவி இறந்து விட்டார்; கருவில் வளர்ந்து வந்த சிசுவும் இறந்து விட்டது.
விபத்தை ஏற்படுத்திய வாகனம், பிராக்டர் கேம்பல் கம்பெனிக்கு சொந்தமானது. கம்பெனியிடம் இருந்து இழப்பீடு வாங்கித்தரும்படி, நியூ இண்டியா இன்சூரன்ஸ் கம்பெனிக்கு முருகப்பா மனு செய்தார். "என் மனைவி மற்றும் அவள் கருப்பையில் வளர்ந்த 28வார சிசுவுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும்' என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த விபத்து நடுவர் மன்றம், "மனைவிக்கு இழப்பீடு அளிக்க வேண்டும்; ஆனால்,கருவில் சுமந்த சிசு இறந்ததற்கு இழப்பீடு தர கோர முடியாது' என்று தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, மும்பை ஐகோர்ட்டில் முருகப்பா அப்பீல் செய்தார். இதை விசாரித்த ஐகோர்ட் "கருப்பையில் வளர்ந்த சிசுவை, மனிதராக ஏற்க முடியாது; அதற்கு இழப்பீடு கோர முடியாது' என்று தீர்ப்பளித்தது.
தீர்ப்பில் கூறியிருப்பதாவது; கருப்பை சிசு, மனிதப்பிறவியாக ஏற்க முடியாது. அதற்கு உயிர் இருக்கலாம்; வளர்ச்சி இருக்கலாம். ஆனால், பிறந்த பின் தான் மனிதனாக அதை ஏற்க முடியும். கருவில் இருக்கும் வரை, அதை மனிதப்பிறவியாக ஏற்க வழியில்லை. மனிதப்பிறவியாக ஏற்றுக்கொள்ள, சிசு பிறந்திருக்க வேண்டும். அப்போது தான் அதை மனிதனாக ஏற்க முடியும். கருவில் இருக்கும் போது மனிதனாக அழைக்க முடியாது. இவ்வாறு தீர்ப்பீல் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மனுதாரர் வக்கில் ஜம்ஷத் மிஸ்த்ரி கூறுகையில்,"சட்டப்படி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் கருவில் இருக்கும் சிசுவும், மனிதப்பிறவியாகத்தான் பிறக்கப்போகிறது. அதை கொன்றதற்காக இழப்பீட்டை அளிக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தில் அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரலாம்' என்று தெரிவித்தார்.
Saturday, June 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment