Monday, June 9, 2008

வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகள் நள்ளிரவு முதல் கலைப்பு

சப்ரகமுவ மற்றும் வடமத்திய இரு மாகாண சபைகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று நள்ளிரவு கலைக்கப்பட்டது. அரசியலமைப்பில் மாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரமே இவ்விரு மாகாண சபைகளும் கலைக்கப்பட்டதாக இரு மாகாண சபைகளின் முதலமைச்சர்களும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே இரு மாகாண சபைகளும் கலைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல் திகதி விரைவில் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது

No comments: