Monday, June 16, 2008

சத்திய சாய்பாபா ஆச்சிரமத்திற்கு தீவிரவாதிகள் மிரட்டல்

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் ஆச்சிரமத்திற்கு தீவிரவாதிகள் விடுத்துள்ள மிரட்டலையடுத்து மத்திய உட்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் பகவானைச் சந்தித்து அவரது பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேற்படி ஆச்சிரமத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இராமாயண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பல நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந் நிலையில் தீவிர வாதிகள் சாய்பாபாவின் ஆச்சிரமத்தை குறி வைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஆச்சிரமத்தை சுற்றிலும் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆச்சிரமத்திற்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் நேற்று மத்திய உட்துறை அமைச்சர் சிவராஜ் பட்டில் சாய்பாபா ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சாய் பாபாவை நேரில் சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்: சாய்பாபாவுக்கு தீவிர வாதிகள் மிரட்டல் இருப்பதால் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். தற்போது சாய்பாபாவுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு பற்றி நேரில் ஆய்வு செய்தேன் என்றார்.

No comments: