Friday, June 6, 2008

வன்னியில் அப்பாவிகள் மீது மிலேச்சத்தனம் அதற்குப் பதிலடியே தெற்குத் தாக்குதல்கள்!

"வன்னியில் அப்பாவித் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் மிலேச்சத்தனமான தாக்குதலுக்குப் பதிலடியாகவே தெற்கில் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்று நாம் நினைக்கிறோம்.''
இப்படித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றுக் கூறினார்.

அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்திற் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

ஆழ ஊடுருவும் அணியினர் வன்னியில் அதிக எண்ணிக்கையான தமிழ் மக்களைக் கொன்று குவிக்கின்றனர். அதற்கான பதிலடியாகத்தான் கொழும்பில் குண்டு வெடிப்புகள் நடத்தப்படுகின்றன என்று நான் நினைக்கிறேன்.

இருந்தாலும் எந்தப் பகுதியிலும் பொதுமக்கள் தாக்கப்படுவதை எம்மால் ஏற்க முடியாது.


வன்னியில் மக்கள் கொல்லப்பட்டால் அவர்கள் புலிகள் என்றும் தெற்கில் கொல்லப்பட்டால் அவர்கள் பொதுமக்கள் என்றும் அரசு சொல்கிறது.

வன்னியில் மக்கள் கொல்லப்பட்டால் அவர்களுக்கு நட்டஈடு கிடையாது.

ஆனால், தெற்கில் மக்கள் கொல்லப்பட்டால் அவர்களுக்கு உடன் நட்டஈடு வழங்கப்படுகிறது.

ஏன் இந்தப் பாகுபாடு?

மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை அரசு உடன் நிறுத்த வேண்டும். வெலிஓயாவில் இருந்து எமது பகுதிகளை நோக்கிச் ஷெல் தாக்குதல் நடத்தப்படுகிறது. அரசு இதை உடன் நிறுத்த வேண்டும்.


அரசு தொடர்ந்தும் மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் அரசு எதிர்காலத்தில் பெரும் இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றார்.

No comments: