மறைந்த முன்நாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் துணைவி ஜானகி அம்மாளின் தம்பி மருமகன் விஜயன் சொத்துத் தகராறு காரணமாக சென்னையில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.ஜானகி அம்மாளின் தம்பி நாராயணனுக்கு 6 பெண்பிள்ளைகள் உள்ளனர்.
அவர்களில் ஒருவர் சுதா.இவரது கணவர்தான் விஜயன் என்கிற விஜயகுமார்.எம்.ஜி.ஆர்.விஜயன் என்றும் இவர் அழைக்கப்படுவார்.
எம்.ஜி.ஆர்.வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்ல வளாகத்தில் சுதா குடும்பத்துடன் வசித்து வருகிறார்.எம்.ஜி.ஆரின் உயிலை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக சுதாவும்,அவரது சகோதரி லதாவுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. மேலும் பாகம் பிரிக்கப்படாத சில சொத்துக்கள் தொடர்பாகவும் அனைத்து சகோதரிகளுக்குமிடையே பிரச்சினையும் உள்ளது.ஏற்கனவே லதா மற்றும் அவரது கணவர் ராஜேந்திரன் மீது சுதா வழக்கும் தொடர்ந்துள்ளார்.அது நிலுவையில் உள்ளது.இந் நிலையில் நேற்று விஜயன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment