
தெஹிவளையில் நேற்றைய தினம் பயணிகள் ரயிலை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபர் ஜதீசன் பாலசுப்ரமணியம் என்ற இளைஞர் வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.
ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியை கடந்து வவுனியாவுக்குள் செல்ல முயற்சித்தபோது, ஊர்காவற்படையினர் இவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பெறப்பட்ட தகவல்களை கொண்டு, அவருடன் தொடர்புடைய ஏனையோரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment