Tuesday, June 17, 2008

பெரியமடு குளக்கட்டு முழுவதும் படையினர் கட்டுப்பாட்டினுள்

சனிக்கிழமை நடைபெற்ற கடும் சமரையடுத்தே, சுமார் இரண்டரைக் கிலோமீற்றர் நீளமான பெரியமடுக் குளத்தின் அணைக்கட்டு கைப்பற்றப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் பெரியமடு குளக்கட்டுப் பகுதி முழுவதும் படையினர் கட்டுப்பாட்டினுள் வந்துள்ளதாகவும் இது புலிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சமரில் புலிகள் பலர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கருதப்பட்டபோதிலும் புலிகள் எந்த செய்திகளும் வெளிவிடவில்லை. தற்போது இந்தப் பகுதியில் படையினர் தங்கள் நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றனர்.

No comments: