Tuesday, June 17, 2008

வவுனியா தற்கொலையின் மர்மமும் அரசின் யுத்தியும்

இலங்கையில் வவுனியா போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புலிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 3 பெண் போலீஸ் உட்பட 12 போலீசார் பலியாகினர் என்பது அரச படைகளின் உள் விவகாரமாக இருக்கும் என்று சந்தேகம் அதிகரித்துள்ளது. மேலும் 22 பேர் காயமடைந்தனர். இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இனப் பிரச்சினையில் உச்சகட்ட போர் வெடித்துள்ளது. கடல், வான், தரை என்று மூன்று வழிகளிலும் இராணுவம் மீது புலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் ஆனால் இப்படியான மண்குண்டுகள் போட்டு கேடித்தனமாக அரசியல் சூழலை உருவாக்க புலிகள் எப்பொழுதும் எண்ணியதில்லை. புலிகளினால் வைக்கப்பட்ட குண்டாக இருந்தால் அந்தக் கட்டிடடமே சரிந்து இருக்கும் என்று மஹிந்தாவுக்கு நன்கு புரியும். இதுவும் முக்கிய கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான சண்டை நடைபெறுகிற போது இப்படியான கேளிக் கூத்துக் குண்டுகளை புலிகள் வைக்கவேண்டிய அவதியோ அவசரமோ கிடையாது என்று ஊடகங்கள் பல கருத்துக்களை தெரிவிக்கின்றது. இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரான வவுனியாவில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று காலை 7.10 மணி அளவில், பல்வேறு இடங்களுக்கு பணிகளுக்கு செல்வதற்காக ஏராளமான போலீசார் அங்கு குவிந்திருந்தனர். இவ்வேiளியில் மனித வெடிகுண்டு என்ற ஒரு மோட்டார் சைக்கிளில் மட்டும் அங்கு காணப்பட்டதாகவும் மற்றும் இறந்தவர்கள் காயமடைந்தவர்கள் மத்தியில் தற்கொலை குண்டுதாரிகள் பற்றிய மர்மம் மறைக்கப்பட்டது ஏன்? என்ற பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் மூன்று பெண் போலீசார் உட்பட 12 போலீசார் பலியாகினர். இது தவிர, 19 போலீசார் படுகாயம் அடைந்தனர். மேலும், அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த பொதுமக்களில் 4 பேரும் காயம் அடைந்தனர். அதில் ஒருவர் பள்ளி மாணவி ஆவார். காயமடைந்த அனைவரும் வவுனியா அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஆனால் குண்டுதாரிகள் பற்றிய மர்மம் மீண்டும் மறைக்கப்பட்டுள்ளது

No comments: