Monday, June 2, 2008
இ-மெயில் மூலம் மிரட்டல் விடுப்பவர்களை கண்டு பிடிக்க வந்து விட்டது புது சாப்ட்வேர்
போலி மற்றும் மிரட்டல் இ-மெயில் அனுப்புவோரை கண்டு பிடிக்க புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது."ஜெய்ப்பூர் மற்றும் உ.பி., மாநிலத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு தங்கள் அமைப்பே காரணம்' என, சில பயங்கரவாத அமைப்புகள் இ-மெயில் அனுப்பியுள்ளன. அந்த இ-மெயில்கள் எங்கிருந்து வந்தன என்பதை போலீசார் கண்டு பிடித்தாலும், அதை அனுப்பியவர் யார் என்பதை கண்டறிய முடியவில்லை. இந்தச் சிக்கலை தீர்ப்பதற்காக, மிரட்டல் இ-மெயில் அனுப்புவோரை அடையாளம் காண்பதற்காக, "கிரிஷ்' என்ற புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேரை பயன்படுத்தும் போது, "சைபர் கபே'க்களுக்கு வருவோரின் புகைப்படம் மற்றும் கைவிரல் ரேகைகள் தானாகவே பதிவு செய்யப் பட்டு விடும். எந்த தேதியில், எந்த நேரத்தில் அவர்கள் கம்ப்யூட்டரை "லாக்-இன்' செய்தனர் என்ற விவரத்தையும் அறிந்து கொள்ளலாம். "வாடிக்கையாளர் பதிவு மற்றும் அடையாள சாப்ட்வேர்' என அழைக் கப்படும் இந்த, "கிரிஷ்' சாப்ட்வேரை, லக்னோவைச் சேர்ந்த ஜி.ஐ., பயோமெட்ரிக்ஸ் என்ற சாப்ட்வேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. நிறுவனத்தின் இயக்குனர் அமித் கவுசல் கூறியதாவது: "கிரிஷ்' சாப்ட்வேரை கம்ப்யூட்டரில் பொருத்தி விட்டால், "சைபர் கபே'க்கு வருபவர்கள் கம்ப்யூட்டர் முன், அமர்ந்தவுடன், வெப் கேமரா உதவியுடன் அவர் களின் புகைப்படம் எடுக்கப்பட்டு விடும். அத்துடன் அவர்கள் கம்ப்யூட் டரை பயன்படுத்தும்போது, கைவிரல் ரேகைகளும் பதிவாகி விடும். கம்ப் யூட்டரின் தகவல் தொகுப்பில் இவை இடம் பெற்று விடும். இதன்மூலம், "சைபர் கபே'க்கு வருபவர்கள் பற்றிய விவரங்களை தனியாக ஆவணங்கள் மூலம் பராமரிக்க வேண்டியதில்லை. மேலும், மிரட்டல் இ-மெயில் அனுப்புவோரின் புகைப்படம் மற்றும் கைவிரல் ரேகைகளை எளிதில் அறிந்து கொள்ள முடியும். குற்றவாளிகளை போலீசார் விரைவில் கைது செய்ய முடியும். சட்ட அமலாக்க துறையினருக்கு இந்த "சாப்ட்வேர்' ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இவ்வாறு கவுசல் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment