Friday, June 6, 2008

தாயையும் மகளையும் வல்லுறவுக்குட்படுத்தி விட்டு தப்பிச் சென்ற காடையர்கள்; ஒலுவில் பகுதியில் சம்பவம்

அம்பாறை ஒலுவில் பகுதியில் தாயும் மகளும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவமொன்று நேற்று முன்தினம் புதன் கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது.

தமிழ் பெண்களான இவ்விருவரும் ஒலுவில் தென்னந்தோட்டம் பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்த போதே புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இருவரும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு கிரான் பகுதியைச் சேர்ந்த இளம் தாயும் அவரது 13 வயது மகளும் மேற்படி வீட்டில் தங்கியிருந்த போது, அதிகாலை ஒரு மணியளவில் அந்த வீட்டினுள் நுழைந்த ஆறுபேரில் நான்கு பேர் இவ்விருவரையும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் இருவரைக் கைது செய்து விசாரணைக்குட் படுத்தியுள்ளனர்.

மேலும், நால்வரைத் தேடி வருவதாகவும் விசாரணையின் பின் சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவார்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட தாயும் மகளும் மருத்துவ பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments: