மணலாற்றுப் பகுதியில் இலங்கை வான் படையினருக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி ஒன்று விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி எறிகணையில் சிக்கி கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது
மணலாற்றுப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது காயமடைந்த படையினரை அநுராதபுரம் மருத்துவமனைக்கு ஏற்றி இறக்கும் பணியில் இந்த உலங்குவானூர்தி ஈடுபட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தாக்குதலுக்கு உள்ளாகிய பெல் 212 ரக உலங்கு வானூர்தி அவரச அவசரமாக அநுராதபுரம் வான்படைத் தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கைப் படையினர் கருத்துச் சொல்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இலங்கை வான்படையினரிடம் பெல் 212 ரக உலங்கு வானூர்திகள் இரண்டே இருந்துள்ளன.
அதில் ஒன்றே விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தாக்குதலுக்கு உள்ளாகிப் பயன்படுத்த முடியாத அளவுக்கு கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment