Wednesday, July 9, 2008

சப்ரகமுவ பகுதியில் மர்ம விமானங்கள்

சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளில் இரவு நேரங்களில் மர்ம விமானங்கள் பறப்பதாக தனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வில்பிரட் மகாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக அவிசாவளை இ.போ.ச.டிப்போவில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;

சப்ரகமுவ மாகாணத்தில் எட்டியாந்தோட்டை, கித்துல்கலை, புளத்ஹோஹிப்பிட்டிய மற்றும் அவிசாவளை பகுதிகளில் இரவு நேரங்களில் இந்த மர்ம விமானங்கள் பறப்பதாக அவ்வப்போது தகவல்கள் கிடைத்து வருகின்றன.

கடந்த சில மாதங்களாக இவ்வாறு இரகசிய விமானங்கள் இரவு நேரத்தில் பறப்பது தொடர்பாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட படைத்தரப்புக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

எது எப்படியோ முப்படையினராலும் பொலிஸாராலும் மட்டுமே பயங்கரவாதத்தை ஒழித்துவிட முடியாது . பொதுமக்களின் உதவியும் அவசியமென்றார்.

No comments: