மணலாறில் ஜனகபுரவுக்கு வடக்கே நேற்று முன்தினம் திங்கட்கிழமை விடுதலைப்புலிகளின் முக்கிய பகுதியொன்றைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. 
முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் ஜனகபுரவுக்கு வடக்கே 10 கிலோ மீற்றர் தூரத்திலேயே, புலிகளின் தற்காப்பு நிலையான இந்தப் பகுதியை திங்கிட்கிழமை காலை 9.30 மணியளவில் படையினர் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
புலிகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட கடும் தாக்குதலின் தொடர்ச்சியாகவே புலிகளின் இந்த முக்கிய நிலை கைப்பற்றப்பட்டதாகவும் இதன் மூலம் புலிகளின் மூன்று பதுங்குழிகளும் மூன்று அகழிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். 
இதேநேரம் யாழ்.குடாநாட்டில் முன்னரங்க பாதுகாப்பு நிலைப் பகுதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல்களில் ஒரு இராணுவச் சிப்பாய் கொல்லப்பட்டதுடன் ஆறுபடையினர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. 
கிளாலி, நாகர்கோவில், முகமாலை பகுதிகளிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன. அன்றையதினம் மன்னார் மற்றும் வவுனியா பகுதிகளிலும் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment