Saturday, July 12, 2008

கனேடியத்தமிழர்களும் பொங்குதமிழும்

தேசப்பிரியன் கனடா

கடந்த சனிக்கிழமை ரொரன்ரோவில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுக்கு சென்ற நசனல் போஸ்ட் பத்திரிகையின் செய்தியாளர் ஸ்ருவட் பெல் அவர்கள் அங்கு ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கூடியிருப்பதை காணக்கூடியதாகவும் இருந்தது எனவும் ஆங்காங்கே புலிக்கொடிகள் பிரபாகரனின் படங்கள் மஞ்சள் சிவப்பு நிறத்திலான குடைகள்; வைத்திருப்பதை அவதானித்த பத்திரிகையாளர் விழாவின் அமைப்பாளர் திரு..திருச்செல்வத்தை அணுகி புலிக்கொடிபற்றி கேட்டபோது அவர்களைத் தாங்கள் கட்டுப்படுத்த முடியாது எனவும் அது அவர்களின் உரிமை என்றும் அவர்கள் வரும்போது அவற்றை கொண்டுவந்தார்கள் எனவும் கூறினார்.

ஆனால் பத்திரிகையாளர் உற்றுநோக்கியபோது சிலர் பெட்டிகளில் புலிக்கொடிகளை கொண்டு வந்து மைதானத்தின் அருகில் வைத்து பொங்கு தமிழுக்கு வந்துகொண்டிருந்த மக்களுக்கு கைகளில் கொடுத்துக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளார். கலந்துகொள்ள வரும் மக்களின் தொகைக்கு ஏற்றபடி மைதானத்தை தெரிவு செய்யவேண்டிய தேவையால் .கடைசிநேரத்தில் மக்களுக்கு அறிவித்தமைக்கு காரணம் எனவும் பத்திரிகையாளருக்கு கூறியுள்ளார். ஆனால் பொங்கு தமிழ் கூட்டத்தில் உரையாற்றிய சி;.ரி;.ஆர்; வானொலி அறிவிப்பாளர் பொன்னையா விவேகானந்தன் நாங்கள் கடைசிநேரத்தில் இடத்தை அறிவிக்கவேண்டி வந்ததுக்கு காரணம் இங்கு புல்லுருவிகள் பலர் இருக்கிறார்கள் இவர்கள் களையப்படவேண்டும் எனக் கூறினார்.

பொங்கு தமிழ் நிகழ்வுக்கு சென்ற நசனல் போஸ்ட் பத்திரிகையாளருக்கு திரு…திருச்செல்வம் கூறியதன் ஓரு பகுதி

Published: Monday, July 07, 2008

Organizer Thiru Thiruchelvam said the location was announced only at the last minute because the event kept growing and they had to find a venue to accommodate the expected crowds Asked about the Tamil Tigers flags in the crowd, he said the organizers had no control over that. "They bring their umbrella, their bring their flags, they say that is their right."

But while some brought their own LTTE flags, men were also circulating in the park carrying boxes filled with paper flags, which they handed out to the crowds. Some also waved Canadian flags.

இந்த திரு…திருச்செல்வம் இவர் முன்பு 2006 ஆண்டு புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட பின்னர் கார்த்திகை மாதம் 26ந்திகதி ரொரன்ரோ இன்டநசனல் சென்ரரில் நடைபெற்ற மாவீரர்தின நிகழ்ச்சிக்கு சென்ற நசனல் போஸ்ட் பத்திரிகையாளர் பற்றிக் அவர்கள் அங்கு நடந்துகொண்டிருந்த நடன நிகழ்ச்சியில் தமிழ்சிறுமிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் கொடியை கையில் உயர்த்தியவாறு நடனம் ஆடியதை நேரடியாகக் கண்டுள்ளார் இந்ததடைசெய்யப்பட்ட கொடிபற்றி அன்றும் இதே(திரு…திருச்செல்வம்தான் மாவீரர்தின அமைப்பாளர்) திரு…திருச்செல்வத்திடம் கேட்டபோது தான் அவர்கள் புலிக்கொடியை கையில் வைத்து நடனமாடியதை காணவில்லை என்று படுபொய்யைக்கூறினார். அதுமட்டுமல்ல இன்டநசனல் சென்ரரின் தலைமை அதிகாரியிடம் இந்தவிழாபற்றிகேட்டபோது சுனாமியால் இறந்தவர்களை நினைவுகூரவே என்று கூறியே மண்டபத்தை பதிவுசெய்தார்கள் என நிர்வாகி கூறினார். சுனாமி அனர்த்தம் நடந்ததோ மார்கழி 26ந்திகதி. இங்கும் இந்த அமைப்பாளர் சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி என பொய்யும் மோசடியும் புரிந்தே மண்டபத்தை பதிவுசெய்து மாவீரர் தினத்தை நடாத்தியிருக்கிறார்.

2006 மாவீரர்தின நிகழ்வுக்கு சென்ற நசனல் போஸ்ட் பத்திரிகையாளருக்கு திரு…திருச்செல்வம் கூறியதன் ஓரு பகுதி

B Y K E L LY PAT R I C K National Post 28november2006 Asked later why a group of young female dancers had raised the Tigers’ flag during their performance, Mr. Thirucheluam said he had not seen the flag himself and pointed out that dozens of dance troupes and Tamil artists had asked to take part in the day’s activities. “There may be Tiger supporters here. We don’t know. You see, they are not asking people their names as they come in. This is an open function,”he said. The CEO of the venue that hosted the Heroes Week gathering said her staff was told the event’s purpose was to mourn the victims of the 2004 tsunami. “The organizer who booked it called it memorial day,” said Gail Bernstein, chief executive of the International Centre, which is located near Pearson airport. “We were told it was to pay respect to people who died in the tsunami.”

இனி விடயத்திற்கு வருவோம் கனடாவில் பொங்குதமிழ் நடாத்துவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆயத்தங்கள் நடைபெற்றதுஅதற்காக பொங்குதமிழ் குடை ஒன்று 25டொலர்படி உலகத்தமிழர் இயக்க தொண்டர்களினால் வீடு வீடாக கொண்டு சென்று விற்பனை செய்தார்கள். ஊர்ச்சனங்கள் பொங்குதமிழை ஒழுங்கு செய்வதாகக் கூறினார்கள். பொங்குதமிழ் நடைபெறுவதற்கு ஓரு வாரத்திற்கு முன்னர் வானொலிகளில் அறிவிக்கப்பட்டது ஆனால் நடைபெறும் இடத்தை இரகசியமாக வைத்திருந்தார்கள். பின்னர் அறிவிக்கப்படும் என்பதை கூறிக்கொண்டிருந்தார்கள். முதல்நாள் இடத்தை அறிவித்தார்கள்.

அன்று பின்னேரம் அவஸ்ரேலியாவில் இருந்து அழைக்கப்பட்ட சிங்கள இனத்தவரும் பொங்குதமிழின் பிரதான பேச்சாளரான செனிவிரட்னாவை புலிகளின் சி.ரி.ஆர் வானொலியில் பேட்டிகாண புலிகளின் முக்கிய பிரமுகர் நேரு குணா அழைத்து வந்தார். பல புலி ஆதரவாளர்கள் ஏற்கனவே கேள்விகளை தயார்செய்து கேட்கத்தொடங்கினார்கள் அவரிடம் ஓரு நேயர் ஆங்கிலத்தில் கூறினார் தமிழீழம் அமைந்தவுடன் அந்த பல்கலைக்கழகத்தின் தலைமைப்பொறுப்பு உங்களிடம்தான் ஒப்படைக்கப்படும் என்றார். அதற்கு பதில் அளித்த சிங்கள இனத்தவரான கலாநிதி செனிவிரட்னா அந்தநேரம் நான் நிலத்திற்கு கீழ்தான் இருப்பேன் என சிரித்துக்கொண்டே பதில் கூறினார்.பேட்டி கண்டவருக்கும் நேயருக்கும் நெத்தியடியான பதிலாக இருந்தது சிறிதுநேரம் வானொலியில் அமைதி நிலவியது அதாவது தமிழீழம் இப்போது கிடைக்காது எனவும் கிடைக்கும் நேரத்தில் நான் இறந்துவிடுவேன் என்பதை மறைமுகமாகக் கூறினார் கலாநிதி செனிவிரட்னா. தமிழீழம் வெகுவிரைவில் மலரும் என்று கற்பனை உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் புலி ஆதரவாளர்களுக்கு இவரின் பதில் பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது ஏற்கனவே நெடுமாறன் திருமாளவன் போன்றவர்கள் வெளிநாடுகளில் நடந்த கூட்டங்களில் விரைவில் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் விரைவில் கிடைக்கும் என்று பல காலமாக சொல்லியும் அது கைகூடவில்லை;. அவர்களின் வார்த்தைகள் தமிழ் மக்களுக்கு புளித்துப்போய்விட்டது இனி கனேடியத்தமிழர்களுக்கு புதுசாக சிங்களவரான கலாநிதி செனிவிரட்னா அவர்களை வைத்து தமது வியாபாரத்தை நடத்தலாம் என்று பார்த்தார்கள் மனிசன் இப்போதைக்கு தமிழ்ஈழம் கிடைக்காது எண்டு உண்மையை சொல்லிப்போட்டுது.

அடுத்தாக வந்த ஓரு நேயர்; ஏன் பொங்கு தமிழ் நடைபெறும் இடத்தை கடைசிநேரத்தில் அறிவித்தீர்கள் எனக்கேட்டார். அதற்கு பதில் அளித்த நேரு குணா சில விசமிகள் ஒட்டுக்குழுக்கள் குழப்பிவிடுவார்கள் அதனால்தான் இடத்தை கடைசி நேரத்தில் அறிவித்தோம் என்றார். அப்படியென்றால் கனேடிய அரசுக்கோ பாதுகாப்புத்துறைக்கோ அஞ்சாத இவர்கள் இந்த சாதாரண ஒட்டுக்குழுக்களுக்கு ஏன் அஞ்சுகிறார்கள்.

பொங்கு தமிழ் கூட்டத்தில் உரையாற்றிய சி;.ரி;.ஆர்; வானொலி அறிவிப்பாளர் பொன்னையா விவேகானந்தன் நாங்கள் கடைசிநேரத்தில் இடத்தை அறிவிக்கவேண்டி வந்ததுக்கு காரணம் இங்கு புல்லுருவிகள் பலர் இருக்கிறார்கள் இவர்கள் களையப்படவேண்டும் என ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன் வீராவேசமாகக் கூறினார். ஓருஊடகவியலாளர் என்று தன்னைக்கூறிக்கொள்ளும் இவர் கனேடிய மண்ணில் தனது மனதில்படிந்துள்ள கொலை வெறியை அங்கு கூடியிருந்தவர்கள் மனங்களிலும் ஊட்டியிருக்கிறார். பொன்னையா விவேகானந்தன் அவர்களே! நீங்கள் உங்களை மறந்து வன்னியில் நின்று உரையாற்றுவதாக நினைத்துவிட்டீர்கள். கனடாவில் தமிழ்மக்கள் மீதான உங்களது கடந்தகால வன்முறையான நடவடிக்கைகள்தான் உங்களை பயங்கரவாதிகளாக இனம்காட்டியுள்ளது மேலும் மேலும் கனேடிய பாதுகாப்புத்துறைக்கும் அரசுக்கும் சவால்விட்டு அவர்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளர்க பொங்குதமிழில் கனடாவில் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் படங்களையும் புலிக்கொடிகளையும் அங்கு வந்த மக்களின்கைகளில் திணித்தவிட்டு மக்கள் வரும்போது பிரபாகரனின் படங்களையும் புலிக்கொடிகளையும் கொண்டு வந்தார்கள் என தில்லு முல்லு திருச்செல்வம் பத்திரிகையாளருக்கு கூறியது மேலும் மேலும் நீங்கள் யார் என்பதை பகிரங்கமாககாட்டியுள்ளது அதுமட்டுமல்ல உங்களுக்கு நன்றாகத் தெரியும் தடைசெய்யப்பட்ட பிரபாகரனின் படங்களையும் புலிக்கொடிகளையும் கூட்டத்தில் வைத்திருப்பது சட்டவிரோதம் என்பதனால் கூட்டத்திற்கு வரும் மக்களின் கைகளில் திணித்துவிட்டால் பொலிசார் இவ்வளவு மக்களையும் கைதுசெய்யவும்முடியாது சட்ட நடவடிக்கையும் எடுக்கமுடியாது என்பதால் உங்கள் சட்டவிரோத நடவடிக்கைக்காக மக்களை கேடயமாக பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பதுதெளிவாகத் தெரிகிறது.

கனடாவில் 03இலட்சம் தமிழர்களுக்கு மேல் வாழ்கிறார்கள். இதில் ரொரன்ரோபகுதியில் மட்டும் இரண்டரை இலட்சம் தமிழர்கள்; நெருக்கமாக வாழ்கிறார்கள். இதில் பொங்கு தமிழுக்கு வந்தவர்கள் தொகை கிட்டத்தட்ட 18முதல்20ஆயிரம்வரையில் ஆகும். இது அந்த மைதானத்தின் சுற்றளவை வைத்தும் மக்கள் நின்ற இடத்தின் அளவையும் கணக்கிட்டு எடுக்கப்பட்ட கணிப்பாகும். இந்தக்கணிப்புகூட மேல் குறிப்பிட்ட தொகையைவிட மக்கள் குறைவாக இருக்கலாம் ஆனால் இதைவிட கூடுதலாக இருக்காது. புலிகளின் TVI தொலைக்காட்சி CTR, CMR, CTR வானொலி ஏனைய வானொலிகள் பத்திரிகைகள் உட்பட சகல ஊடகங்களும் பயன்படுத்தப்பட்டு வானொலிகளில் தொடர்ந்து மக்களே வீதிக்கு இறங்குங்கள் உங்களை ஏற்றிச்செல்ல பஸ்வண்டிகளை ஒழுங்கு செய்து உள்ளோம். என அடிக்கடி ஒலிபரப்பியபடி இருந்தார்கள் பஸ்வண்டிகள் கிட்டத்தட்ட 21 இடங்களில் இருந்து மக்களை ஏற்றிச்சென்றார்கள். சகல வளங்களையும் பாவித்து இவர்களால் குறிப்பிட்ட மக்களைத்தான் வரவழைக்கமுடிந்தது.

திருச்செல்வம் பொன்னையா விவேகானந்தன் நேரு குணா போன்றவர்கள் நேர்மையற்ற ஊடகவியலாளர்கள் இவர்கள்தான்; புலிகளின் TVI தொலைக்காட்சி CMR, CTR வானொலிகளை நடாத்துகின்றார்கள். கண்ணுக்கு முன்னாலேயே கனேடிய பத்திரிகையாளருக்கு படுபொய் சொன்ன திருச்செல்வம் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள இலங்கையில் நடக்கும் செய்திகளை எப்படி திரித்து கனேடிய தமிழ்மக்களுக்கு சொல்லுவார் என்பதை எண்ணிப்பாருங்கள் இவர்கள் எல்லாம் அரசியல் விமர்சகர்கள். பொங்கு தமிழில் காணப்பட்ட கொடி பிரபாகானின் படங்கள் எல்லாம் வித்தியாசம் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தது. எப்படி மக்கள் கொண்டு வந்திருந்தால் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கும். கனேடிய பத்திரிகையாளருக்கு பொய்யைச் சொன்ன திரு…திருச்செல்வம் பொருந்தச் சொல்லவில்லை.

கனேடியன் தமிழ் காங்கிரஸ் டேவிற் பூபாலப்பிள்ளை சிற்றம்பலம் மார்க்கம் நீதன்சான் திரு…திருச்செல்வம் தங்கவேல் போன்றவர்கள் கனேடியன் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும்போது எங்களுக்கும் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நாங்கள் தமிழ் மக்களுக்காகவே குரல் கொடுக்கிறோம் கனேடியச்சட்டங்களை மதிக்கிறோம்.

கனேடிய அரசு தமிழர் பிரச்சினையில் தலையிடவேண்டும் என்று எல்லாம் கனேடியன் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பவர்கள் பொங்கு தமிழ் கூட்டத்தில் கனடாவில் தடைசெய்யப்பட்ட பிரபாகரன் படத்தையும் புலிக்கொடியையும் இவர்கள் தடுத்து நிறுத்தாமல் அங்கு அனுமதித்தது ஏன்?; கனேடியன் அரசியல்கட்சியை சேர்ந்த எந்த அரசியல்வாதிகளும் கலந்துகொள்ளவில்லை காரணம் தமிழர்களின் நிகழ்ச்சிகள் என்று அழைத்துவிட்டு தடைசெய்யப்பட்ட புலிக்கொடியையும் பிரபாகரன் படத்தையும் தூக்கிப்பிடித்துவிடுவார்கள். இப்படியாக இவர்களுக்கு வீண் சங்கடத்தை கொடுத்துவிடுவார்கள் என்று சில அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு சொல்லியும் இருக்கிறார்கள்.; கனேடியன் அரசையும் சகல கட்சிகளையும் எம்மீது அனுதாபத்தை ஏற்படுத்தி மேலும் அவர்களுடன் ஓரு நல்லுறவை ஏற்படுத்தி கனேடிய சட்டத்தையும் மதித்து செயல்பட்டால் நிட்சயம் நல்ல எதிர்காலம் எமக்கு உண்டு. இல்லையேல் மேலும் தடைமேல் தடைகள் வருவது தவிர்க்கமுடியாதது


தேணி இணையம்

No comments: