மகாத்மா காந்தி தமிழில் போட்டுக் கொடுத்த கையெழுத்தை 70 ஆண்டுகளாக பாதுகாப்பாக பேணி வந்தவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்த சீத்தாபதி நாயுடு (வயது 84) என்பவரே இவ்வாறு இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த 1938ஆம் ஆண்டில் பீகா?ல் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மகாத்மா காந்தி அடிகள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிதி திரட்டினார்.
22.2.1938 அன்று நாகப்பட்டினம் ஒளரி திடலுக்கு நிதி திரட்ட வந்த காந்தி அடிகளிடம், அப்போது 13 வயது சிறுவனாக இருந்த சீத்தாபதி நாயுடு தனது தந்தையுடன் சென்று பூகம்ப நிதியாக 5 ரூபா வழங்கினார்.
அவரது உதவும் தன்மையை பாராட்டிய காந்தி அடிகள்,வெள்ளைத்தாள் ஒன்றில் காந்தி என தமிழ் மற்றும் இந்தியில் கையெழுத்திட்டு வழங்கியுள்ளார்.
அந்த கையெழுத்தை சீத்தாபதி நாயுடு பொக்கிஷமாக கருதி வெள்ளிப் பேழையில் வைத்து பாதுகாத்து வந்தார். பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்து குரோம்பேட்டையில் தங்கிய சீத்தாபதி நாயுடு, காந்தி கையெழுத்து போட்டுக் கொடுத்த தாளை தொடர்ந்தும் பாதுகாக்க விரும்பி கடந்த மே மாதம் 23ஆம் திகதி சென்னை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார்.
இதற்கிடையே வயது முதிர்ந்த நிலையில் உடல்நலம் குன்றியதால் பிறருக்கு பாரமாக இருக்கக் கூடாது எனக் கூறிவந்த இவர் சென்ற திங்கட்கிழமை மதியம் தனது வீட்டு வளாகத்தில் வைத்து உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இச்சம்பவம் குறித்து சிட்லப்பாக்கம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொடுவருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment