காத்மண்டு: நேபாளத்தை தாய்நாடாகக் கொண்ட ஹிந்தி நடிகை மனிஷா கொய்ராலாவிற்கு சொந்தமான, நேபாளத்திலுள்ள 2 ஏக்கர் நிலத்தை மாவோயிஸ்ட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.
ஹிந்தி நடிகை மனிஷா கொய்ராலா. இவர் "முதல்வன்' தமிழ் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் மும்பையில் தங்கி இந்தி படத்தில் நடித்தாலும் இவரது தாய் நாடு நேபாளம் ஆகும். அந்த நாட்டு பிரபல அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாத்தா தான் அந்நாட்டு பிரதமர் கொய்ராலா ஆவார்.
இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம், தலைநகர் காத்மண்டுவில் புதனில்கந்தா என்ற இடத்தில் உள்ளது. இந்த நிலத்தை மனிஷா வாங்கி, அதை தன் தாயார் சுஷ்மா கொய்ராலாவுக்கு நன்கொடையாக வழங்கினார்.
இந்த நிலத்தை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் அதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, அதில் பயிரிட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் நடந்தபோது மனிஷா நேபாளத்தில் இல்லை. அவர் அமெரிக்கா சென்று இருக்கிறார். அவரது தந்தை பிரகாஷ் கொய்ராலா மும்பையில் இருக்கிறார். அவரது தாயார் சுஷ்மா மட்டும் தான் காத்மண்டுவில் வசித்து வருகிறார். அவரால் நிலம் கைப்பற்றப்படுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment