(வாசகர் ஆக்கம்)
July 15, 2008
கோபாலசாமி என்ற ஒருவர் இருக்கிறார். அவர் ஏதாவது ஒரு அறிக்கை விடுவார் கனகாலமாக இந்திய பிரதமருக்கு எச்சரிக்கை விட்டு கெண்டு இருக்கிறாராம் ஏன்என்றால் இந்திய மீனவர்களை இலங்கை படையினர் கைது செய்கிறார்களாம். அவையளின் கடல் எல்லை தாண்டி எங்கட நாட்டு எல்லைக்கு வந்தால் கைது செய்யாமல் கட்டியா கொஞ்சுவாங்கள். புலிகளை காப்பாற்ற சொல்லி நரி ஊளைவிட்ட மாதிரி கத்திக் கொண்டு இருந்தவர் ஒண்டும் நடந்த மாதிரி தெரியவில்லை பொங்குதமிழ் என்ற பெயரில் வெளிநாட்டில இருக்கும் கொஞ்ச விசுக்கோத்து கூட்டங்கள் தலைவரின் படத்தை தலையில சுமந்து கொண்டு எங்கள் தலைவர், எங்கள் தலைவர் என கூவிக்கொண்டு திரிபவர்கள் நாட்டில வன்னிக்கு போய் தலைவரிடம் போனால் உடம்பில வைக்க கூடாத இடத்தில் எல்லாம் குண்டை கட்டி விடுவாரே அதோட தமிழீழம் கிடைக்குமே? நடக்கிற கதை தானே. தமிழீழத்தை தமிழன் விரும்புகிறான் ஆனால் பிரபாகர பயங்கரவாத ஈழத்தை யார் விரும்புகிறான்? உலகத்தில ஒருநாடு கூட இந்த புலி இயக்கத்தையோ இந்த போராட்டத்தையோ ஏற்றுக் கொள்ளவில்லை. எந்த ஒருகாலத்திலும் ஒரு நாடும் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை. இப்ப 25மேலாக அந்தபேரணி, இந்தபேரணி பொங்குதமிழ், பொங்காததமிழ் என கூட்டம் போட்டு கத்திக் கொண்டு திரியுதுகள் ஆனால் இந்த விசுகோத்து கூட்டத்தை யாரும் கூப்பிட்டு இதுவரை கதைத்தது மாதிரி தெரியவில்லை.
கல்வி அறிவே கிடையாத ஆபிரிக்கா கண்டத்திலேயே எத்ததனையோ நாடுகள் கிடைத்திருக்கு தமிழனுக்கு மட்டும் ஏன் நாடு கிடைக்கவில்லை? ஒரு நாட்டை வைத்திருக்க கூடிய தகுதி தமிழனுக்கு இல்லை என்று தான் அர்த்தம். புலிகாராகள் மூன்று பேர் ஒன்றாக கூடி கதைத்தவையாம் nஐனிவாவில் உள்ள ஐ.நா.சபை இல் நாட்டியிருக்கும் இலங்கை கொடியை அகற்றிவிட்டு புலிகொடியை நாட்டி வைத்து இருக்கிறாங்களாம்… எப்படிபட்ட அறிவுடையதுகள் என்று பாருங்கள். 
கோபாலசாமியும், நெடுமாறனும், திருமாவளவனும் 6 கோடி உள்ள தமிழ்நாட்டை அமைப்பதற்கு போராடலாமே 12வீதம் தமிழர்கள் உள்ள எங்கள் நாட்டை பிரித்து தனிநாடு வேண்டுமாம் இதை யார்தான் ஏற்றுக் கொள்வார்கள்? கொசவோ குமரி பெட்டையளுக்கு குண்டுகட்டி வெடிக்க வைத்தா நாட்டை பெற்றவர்கள். பிரபாகரனும் பொட்டுஅம்மானும் இல்லாமல் போனால் சிலநேரம் தமழீழம் மலரும்.
கோபாலசாமி, நெடுமாறன், திருமாவளவன் இவங்கள் எல்லா யார்??; இவங்களுக்கும் இலங்கை தமிழனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?? இவங்கட ஆக்கள் தான் கூலிக்கு வந்தவங்கள் பத்துலச்சம் பேர் மலைநாடுகளில் இருந்து கஸ்ரப்படுகிறார்கள். அவங்களை பற்றி இவங்கள் அக்கறை கொண்டார்களா? இல்லையே இவங்கள் புலிகள் கொடுக்கும் காசுக்கு சோரம் போகின்றவர்கள் அவ்வளவுதான். எது எப்படியோ பெட்டைகோழி கூவி பொழுது விடியாது என்பார்கள் அதுபோல் இவங்கள் கத்தி ஒன்று நடக்க போவதில்லை என்று அறிவோமாக…
–தமிழர் நலன்விரும்பி..
அதிரடி இணையம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment