Tuesday, July 15, 2008

புதிய கேலிச்சித்திரத்தால் பெரும் பரபரப்பு


முஸ்லிம் பாரம்பரிய உடையில் ஒபமா பயங்கரவாதியாக அவரது மனைவி

அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபமா, முஸ்லிம் பாரம்பரிய உடையணிந்திருப்பது போன்றும் அவரது மனைவியை பயங்கரவா தியொருவராகவும் சித்திரித்து கேலிச்சித்திர மொன்றை வெளியிட்ட "த நியூ யோர்க்கர்' சஞ்சிகையானது ஒபமாவின் குழுவினரது கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
இது தொடர்பில் பராக் ஒபமாவின் பிரசார பேச்சாளர் ஒருவர் விபரிக்கையில், ""இந்த கேலிச்சித்திரமானது இரசனையற்றதும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதுமாக உள்ளதென தெரிவித்தார்.

அதேசமயம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபமாவின் எதிராளியாக போட்டி யிடும் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஜோன் மக்கெய்னின் பேச்சாளரும் மேற்படி ஓவி யம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

பரி பிலிட் என்ற பிரபல ஓவியரால் வரையப்பட்ட இந்தக் கேலிச்சித்திரமானது "த நியூ யோர்க்கர்' சஞ்சிகையின் முன் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

மேற்படி ஓவியத்தில் முஸ்லிம் பாரம்பரிய ஆடையை அணிந்திருந்த பராக் ஒபமா, இயந்திர துப்பாக்கி சகிதம் ஒரு போராளி போல் காணப்பட்ட தனது மனைவியான மிசெல்லியின் கைகளைத் தொட்டு பாராட்டு தெரிவிப்பது போலவும் அவர்கள் நின்றிருந்த அறையின் சுவரில் அல்கொய்தா தலைவர் ஒஸாமா பின்லேடனின் உருவப்படம் காட்சியளித்துக் கொண்டிருக்க, அமெரிக்கக் கொடி தீயில் எரிவது போலவும் சித்திரிக்கப்பட்டிருந்தது.

இது சம்பந்தமாக "த நியூ யோக்கர்' சஞ்சிகைப் பேச்சாளர் ஒருவர் விபரிக்கையில், ஒபமாவை முஸ்லிம் ஒருவராக சித்திரித்து அவரது அரசியல் செல்வாக்கை குறைக்கும் முயற்சிகளின் விளைவாக ஏற்பட்ட அச்சமொன்றை வெளிப்படுத்துவதாக மேற்படி கேலிச்சித்திரம் அமைந்துள்ளதாக கூறினார்.

No comments: