
புலிகள் சிறு,சிறு தாக்குதல்களை நடத்திக் கொண்டு தந்திரோபாயமாக தங்கள் கட்டுப்பாட்டு பிரதேசங்களை அரசிடம் பறிகொடுத்து விட்டு பின்வாங்கி ஒடிய படத்தொகுப்புகள் பின்வருமாறு.. புலிகள் 2005ஆண்டு நெவம்பர் 17 திகதிக்கு முன்பு கிட்டதட்ட யாழ் குடாநாட்டையும், திருகோணமலை மத்திய பகுதியையும் தவிர மிகுதி முழு தமிழீழ(?) பகுதியையும் தங்கள் கட்டுபாட்டில் வைத்திருந்தார்கள். பிரபாகரனுடன் கிளிநொச்சியில் நடந்த சர்வதேச ஊடகவியளார்களுடனான சந்திப்பில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கூறியதாவது தமிழீழ பிரதேசத்தில் எழுபது சதவீதத்துக்கு மேற்பட்ட பகுதியை நாங்கள் எங்கள் கட்டுபாட்டில் வைத்திருக்கிறோம் என்று ஊடகவியளார்களுக்கு அறிவித்திருந்தார். அது முற்றிலும் உண்மையானதாகும். அன்ரன் பாலசிங்கம் போன்றவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் இன்றைக்கு புலிகள் முழு தமிழீழத்தையும் இழக்க வேண்டி இருந்திருக்காது போல் உள்ளது. அன்ரன் பாலசிங்கம் சர்வதேச சமூகத்துக்கு நன்கு பரீச்சயமானவர். அவரால் சர்வதேசத்துடன் கதைத்து இந்த போரை எப்படியாவது நிறுத்தி இருந்திருப்பார்;. அவர் பிரபாகரனையும் ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வைத்திருந்திருப்பார். புலிகள் அன்ரன் பாலசிங்கத்தை இழந்தது தமிழீழத்தை இழந்த மாதிரி தான் ஆகிவிட்டது…
-உண்மை விளம்பி-










No comments:
Post a Comment