Thursday, July 31, 2008

கைது செய்யப்பட்ட புலிகள் மூவரே தம்பியண்ணாவின் இருப்பிடத்தினை காட்டி கொடுத்தனர்!

புலிகளுக்கு தேவையான அவசர பொருட்களை வன்னிக்கு கடத்தி வந்த மூவர் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்கள் விசாரனையின் போது கொடுத்த தகவலினை அடுத்தே தம்பியண்ணா நேற்றைய தினம் கியு பிரிவின் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டதாக இந்தியாவின் பி.ரி.ஐ (P.T.I ,Press Trust of India)செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. சென்னையினை பிறப்பிடமாக உடைய 28 வயதுடைய குமரகுருபரன், இராமநாதபுரத்தினை சேர்ந்த 37 வயதுடைய ரமேஷ் மற்றும் இலங்கையின் பேசாலையினை சேர்ந்த 28 வயதுடைய மன்மோகன் ஆகியோர் கடந்த வாரம் கியு பிரிவு புலனாய்வு துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டதின் மூலம் புலிகளின் முக்கிய புள்ளியான தம்பியண்ணாவின் இருப்பிடம் தெரிய வந்ததுடன் புலிகளின் தமிழக வலைப்பின்னலும் (Network) சிதைக்கப்பட்டுள்ளதாக பி.ரி.ஐ தெரிவித்துள்ளது.

மன்னார் பேசாலையினை சேர்ந்த மன்மோகன் தமிழகத்தில் இருந்து புலிகளுக்கு தளபாடங்களை அனுப்புவதில் பிரதான அங்கம் வகித்தாக விசாரனையில் தெரிய வந்துடன் இவரிடம் இருந்து இந்திய ரூபா 7 லட்சம் பெறுமதியான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. வெளிநாடு ஒன்றில் இருந்து தமிழகத்திற்கு தருவிக்கப்பட்டு , புலிகளுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டு இருந்த 40 குதிரை வேகம் (40 horse power) உடைய 5 யமாகா படகு இயந்திரமும் மன்மோகனிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. கடல் புலிகள் இவ் வகையான இயதிரங்களை தரம் உயர்த்தி அதி வேகப்படகுகளாக பாவித்து வருவது குறிப்பிடதக்கதாகும்.

புலிகள் தாம் தமிழகத்தில் இருந்து வெடிபொருட்கள், குண்டுகளை வெடிக்க வைக்கும் திரிகள் (detonators) , படகு பாகங்கள் , குண்டு தயாரிக்க உதவும் இராசயன பொருட்கள் , தொலை தொடர்பு கருவிகள் (walkie- talkies) , இராணுவ உடைகள் தயாரிக்கும் துணிகள், படகு பாகங்களை ஒட்டுவதற்கு பாவிக்கும் பசைகள் , இந்தியாவினை சேர்ந்த கைத்தொலைபேசி எண் அடையாள (SIM cards ) அட்டைகள், செய்திமதி வழிகாட்டி கருவிகள் ( GPS, Global Positioning System) ஆகியனவற்ரை கடத்தி வந்தாக இந்திய கியு பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

No comments: