அரசாங்கப்படையினரிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடையும் நாள் வெகு தொலைவில் இல்லை என கருணா அம்மான் தெரிவித்துள்ளார். போலிக் கடவுச் சீட்டின் மூலம் பிரித்தானியாவிற்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டு, சிறைத் தண்டனை அனுபவித்ததன் பின்னர் கருணா நாடு திரும்பியுள்ளார்.
கருணா நாடு திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு அளித்த முதலாவது செவ்வியின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவப்படையினரின் தாக்குதல்களுக்கு மத்தியில் விடுதலைப் புலிகள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளை இல்லாதொழிப்பதற்கு தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்குமாறு கருணா கோரிக்கை விடுத்துள்ளார்.முறைகேடுகள் இல்லாமலும், தனது விருப்பின் பேரிலும்தான் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பியதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான கருணா தெரிவித்துள்ளார். தனது மக்களுக்கு தான் செய்ய வேண்டிய பணிகளைக் கருத்தில் கொண்டு தான் நாடு திரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என்று தான் விரும்பவில்லை என்றும் பிள்ளையான் அப்பதவியில் இருப்பதை தான் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
வடக்கில் நடந்துவரும் மோதல்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எதுவித சம்பந்தமும் கிடையாது; இராணுவத்துக்கு தமது அமைப்பினர் உதவுவார்கள் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழோசைக்கு பிரத்தியேகமாக செவ்வியொன்றை வழங்கிய கருணா அவர்கள், கிழக்கு மாகாணத்தில் அவசரமாக தேர்தல் நடத்தப்பட்டதன் காரணத்தினால் தமது அமைப்புக்கு மேலும் கிடைத்திருக்க வேண்டிய ஆசனங்கள் கிடைக்காமல் போனதாகக் கூறியனார்.
இருந்தபோதிலும் தமது அமைப்பு இந்த தேர்தலில் வெற்றி பெற்றது குறித்தும், தனது கட்சியைச் சேர்ந்த பிள்ளையான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.
முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கருத்து
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்சித் தலைவராக கருணா நீடிப்பார் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கருணா அவர்கள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வருகையைத் தெரிவித்ததாகவும், தனக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் பின்னர் சந்திப்பதாக கருணாவிடம் தெரிவித்துள்ளதாகவும் முதல்வர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment