பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி
பகுதி-2
ஏழெட்டு வருடங்களாகத் தான் பொங்கி எழுகிறீர்கள ஒரு லட்சம் பேர் துள்ளிக் குதித்து. குதியம் குத்தி. குத்தி முறிந்து எதைச் சாதித்தீர்கள்? இதுவரையும் நீங்கள் செய்தது தான் என்ன? புலிகள் கடத்திக் கொண்டு போய் பயிற்சி கொடுத்ததை தெரியாதது போல நடித்து. செஞ்சோலைப் படுகொலைக்கு ஒப்பாரி வைத்து ஓலமிட்டு. சர்வதேச அனுதாபம் தேடி குத்தி முறிந்த நீங்கள். அந்த அனுதாபம் கிடைப்பதற்கு முன்பாகவே. புலிகள் பஸ்ஸிற்கு கண்ணி வெடி வைத்ததும் பின்புறத்தில் பொல்லால் அடித்த புழுகத்தில் துள்ளிக் குதித்து ஆட்டம் போட்டீர்கள், பிறகெதற்கு ஐயா சர்வதேச சமுகம். இந்தியா. நோர்வே எல்லாம்
அசத்தப் போகிறார் தேசியத் தலைவர். கலக்கப் போகிறார் சூரிய தேவன் என்று பேசாமல் பொங்கி முடிந்த கையோடு தொலைக்காட்சித் தொடர் பார்க்கப் போக வேண்டியது தானே,
நீங்கள் பொங்கி எழுந்து மந்தைகள் போல. ஊரோடி ஒத்தோடித் திரண்டு எழுவதற்கு காரணமா வேண்டும். ஊரிலுள்ள கடைக்காரர்கள் எல்லாம் தமிழகத்திலிருந்து சாத்திரிமாரை இறக்கி. பேஸ்மென்டில் குடி வைத்து. நாடி ஜோதிடம். காண்டம் என்றெல்லாம் விளம்பரம் செய்ய. கூட்டமாய் போய். சாந்தி பூசை செய்வதற்கு ஆயிரக்கணக்கில் கொட்டுகின்ற கூட்டம் தானே நீங்கள்
ஊரில் உள்ள ஏமாற்றுக்காரன் எல்லாம் அம்மாக்களையும் அம்மா பெயரில் உள்ள ஐயாக்களையும் சாமியார்கள் என்று அழைத்து வந்து கட்டணம் வசூலிக்க. வரிசையாய் காணிக்கை போட்டு தரிசனம் பெற்று. சௌபாக்கியம் வேண்;;டுகின்ற புண்ணியவான்கள் தானே நீங்கள்.
பேப்பர்க்காரர்கள். ரேடியோக்காரர்கள் எல்லாம் தமிழகத்து தொலைக்காட்சி. சினிமாக்கூட்டத்தோடு. ஆட்களையும் இறக்கி பணம் சம்பாதிக்க. இன அழிப்பு ஒப்பாரிக்கு நடுவிலும் ஓடிப் போய். குலுக்கல் நடனம் பார்த்து விசிலடிக்கும் கும்பல் தானே நீங்கள்.
கிறிஸ்து பிறந்த நாளிலிருந்து எட்டாம் நாள் ஞானஸ்நானம் பெற்ற தினத்தை புதுவருடமாய் கொண்;டாட. அன்றைக்கு கோவிலுக்குப் போய் ஐம்பது ருபாவுக்கு றிசீட் வாங்கி அர்ச்சனையும் செய்து. ஐயர் கையால் கைவிசேடச் சில்லறை வாங்க முண்டியடிக்கும் அறிவுக் கொழுந்துகள் தானே நீங்கள்
ஆழிப் பேரலையால் மக்கள் அழிந்து போக. அந்த மக்களுக்கு இந்தப் பணம் எல்லாம் எப்படிப் போய்ச் சேரும் என்ற சிந்தனையே இல்லாமல். ஒழிக்கத் தெரியாத திருடன் தலையாரி வீட்டில் ஒழித்தது போல. திருட்டுக் கூட்டத்தின் கைகளில் பணத்தைத் திணித்து ஏமாந்த சோணகிரிகள் தானே நீங்கள்.
மாவீரர் தினத்திற்கு கடதாசி மட்டையில் மாவீரர் சமாதி செய்து. பூ விற்றே புலிகள் காசு சம்பாதிக்க. வாங்கிய பூவோடு. அந்தப் புனிதப் புதைகுழியைத் தொட்டுக் கும்பிடும் பக்த கோடிகள் தானே நீங்கள்.
பகுத்தறிவுக்கும் உங்களுக்கும் என்னையா சம்பந்தம்? சொந்தப் புத்தியில் என்ன காரியம் பண்ணியிருக்கிறீர்கள்? மற்றவன் போகிறான் என்று பின்னால் போவதைத் தவிர என்ன செய்திருக்கிறீர்கள்?. நீங்கள் பொங்கி எழுந்தது உங்கள் தமிழ் உணர்வினால் தான் என்று நாங்கள் நம்ப வேண்டுமாக்கும்?
உங்களை வழிநடத்தும் கூட்டத்தைப் பாருங்கள்,
மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அறிக்கை வெளியிட்ட போது. தொண்டர் எடுபிடிகளும். குண்டர் அடிதடிப்பொடிகளுமாய் போட்ட சன்னதத்தில் புலிகளுக்குத் தடை கனடாவில் தடை வந்து சேர்ந்தது, சிறுநீர் கழிக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன என்பது போல. புலிகளுக்கு ஜனநாயக வழி காட்ட முயற்சித்த பொப் ரே கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் ஒரு சிறுகூட்டம் ஆடிய ஆட்டம் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை உங்களால் விளங்கிக் கொள்ள முடியாது, இப்போது. இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்மா என்று ஆட்டம் போட்டு என்ன பயன்?
ஊரைக் கெடுக்க ஒரு லட்சம் பேர் தேவையில்லை, அந்தக் குண்டர் கூட்டமே போதும்,
கனடா வந்து இருபது வருடங்களுக்கு மேலாக உடம்பு வளைச்சு வேலை செய்யாமல். இயக்கம் நடத்தும் மாதகல் விண்ணனும். சுத்து(மாத்து) அம்பலங்களும் தான் உங்கள் தலைவர்கள். திருட்டுச் செல்வங்களும் பட்டிக்காட்டுப் ஷபோ நாயாக்களும் தான் உங்கள் வழி காட்டிகள். முயக்கத்துப் பைத்தரவளிகளும் முகாபே ஆட்டுக்குட்டிச் செம்மறிகளும் தான் உங்கள் மதியுரைஞர்கள் என்றால் உங்களால் எதைத் தான் சாதிக்க முடியும்?
இங்கே உள்ள பல சிறுபான்மை இனங்கள் தங்கள் நலன்களை முன்னெடுக்க. தங்கள் இனத் தலைவர்கள் மூலமாக மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களை வளைத்துப் போட. தலைநகரில் பிரசாரங்களை மேற் கொள்கிறார்கள், இந்தக் குள்ளநரிக் கூட்டத்தை வைத்துக் கொண்டு உங்களால் எதைச் சாதிக்க முடியும்?
மாதகல் விண்ணனைக் கூட்டிக் கொண்டு. ஒட்டாவா போனால். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ் கதை தான் நடக்கும், சரி. ஒரு விசயம் தெரிந்தவன் அதைச் செய்கிறான் என்றால் கூட. இந்த விண்ணன் கூட்டம் தலைவருக்கு சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும் என்று மிரட்டும், அல்லது யாராவது அரசியலில் நுழைந்தாலும். நண்டு போல. அதை உருப்பட விடாம.ல் கல்லுக் குத்தவும். பெட்டிசன் அடிக்கவும் உங்களுக்குள்ளேயே ஒரு புல்லுருவிக் கூட்டம் உண்;டு,
புலிவேசம் போட்டு பணம் பண்ணும்; குள்ளநரிகளும். பிழைப்புக்காய் புலிக்கோசம் போடும் ஷயாவார ஒட்டுண்ணிகளும். சொந்த அரசியல் கனவுகளோடு உங்கள் முதுகில் சவாரி செய்ய உங்களை உறுஞ்சும் புல்லுருவிகளும். சமுகத் தலைவர்கள் என்று வேசம் போட்டு காரியம் சாதிக்கும் போக்கிரிகளும். உங்கள் முன்னுக்கு முகமன் கூறி முதுகின் பின்னால் நஞ்சைக் கொட்டி குலத்தை வேரறுக்கும் ஊடகக் கோடரிக்காம்புகளும். கூட இருந்தே குழி பறிக்கும் அரசியல் ஆய்வு அயோக்கியர்களும் உங்களுக்குள்ளேயே தான் இருக்கின்றனர், உங்களுக்கு அழிவு உங்களுக்குள் உள்ளவர்களால் தான்,
அறிந்தோ அறியாமலே தவறான தலைமைகளால் ஏமாந்து போனாலும். தங்களோடு உரிமைப் போராட்டத்திற்கு உண்;மையாகப் புறப்பட்டவர்களை புலிகள் அழிக்க. அங்கே வாழ முடியாமல் வெளியேறி. தங்கள் சொந்தப் பணத்தைச் செலவழித்து எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல். தங்கள் கூட இருந்த போராளிகளுக்கு இன்றுவரைக்கும் நினைவஞ்சலி செய்யும் மாற்று இயக்கத்தவர்கள்,,, புலிகளின் கொலைப் பயமுறுத்தல்களுக்கு இடையிலும். ஐம்பது பேர் வந்தாலும் கூட்டமாய் கூடி. எமது மக்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்;;டும் என்பதற்காக. தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்யத் துடிக்கும் உண்மையான தமிழ் அபிமானிகள் என்று ஆயிரம் பேரைக் காட்ட முடியும்,
அழிந்து கொண்;;டிருக்கும் தமிழினத்திற்கு எங்களால் முடிந்த எதையாவது செய்ய வேண்;;டும் என்று தன்னலமில்லாமல். பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்கும் ஒரு நேர்மையாளனை உங்களுக்குள் காட்ட முடியுமா?
பின்னர் எதற்கையா. மற்றவர்களைத் துரோகிகள் என்று பூச்சாண்டி காட்டுகிறீர்கள்
அங்கே. ஒரு புறம் இராணுவத் தாக்குதல்களில் உயிர்களையும் வீடுகளையும் இழந்தும் மறுபுறம் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பில் பிள்ளைகளை இழந்தும் என மத்தளம் போல இரண்டு பக்கமும் அடிவாங்கும் அந்த மக்களுக்கு நன்மை செய்ய முடியாவிட்டாலும். தீமையாவது செய்யாமல் இருக்கலாமே?
ஏதோ உங்கள் லட்சம் பேர் பலத்தைக் காட்டி. கனடிய அரசியல்வாதிகளை உங்கள் வாக்கு வங்கி மூலம் மிரட்டலாம். கனடிய அரசியலின் கிங்மேக்கர்கள் நீங்கள் என்று நீங்கள் கனவு கண்டால்,,, பாவம் நீங்கள்,, உங்களுக்கு நான்றி வானக்கம் சொல்லும் கனடிய அரசியல்வாதிகளே உங்கள் பொங்கல் விழாப் பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை என்றவுடனாவது உங்கள் வாக்குப் பலம் உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டுமே
இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில். இந்தச் சர்வதேசத் தடைகள். பொலிஸ் நடவடிக்கைகளில் இருந்து தப்பி. சர்வதேச அங்கீகாரத்தைப் பெறவும். அங்கே ஆப்பிழுத்த குரங்கு போல மாட்டிக் கொண்டு. வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் புலிகளைக் காப்பாற்றவும் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது,
பேசாமல் புதிய மதம் ஒன்றை ஆரம்பிப்பது தான் அந்த வழி,
உங்களுக்கு அரசியல் சுட்டுப் போட்டாலும் வராது என்று எங்களுக்குத் தெரியும், போராட்டத்தை அரசியல்மயப்படுத்தத் தான் உங்களுக்கு வக்கில்லை, ஆன்மீகமயப்படுத்தவாவது முடியாதா?
கனடாவில் சாயிபாபாவுக்கும் சுவாமி பிரேமானந்தாவுக்கும் பக்தர்கள் இருப்பதற்கு அரசு தடை இல்லாத போது. சூரியதேவனுக்கு ஒரு கோவில் கட்டுவதில் என்ன தான் சிக்கல்? ஏற்கனவே புலிகள் பணம் சம்பாதிக்க விற்ற கலண்டர்கள் வரவேற்பறையில் தை மாத தலைவர் படத்தோடு வருடம் பூராய் காட்சியளிக்கின்றன, போதாக்குறைக்கு. சாமியறைக்குள்ளும் தலைவரை வைத்து மிகுந்த பயத்துடன் கூடிய பக்தியுடன் கும்பிடுகிறீர்கள்,
ஏற்கனவே உள்ள கோயில்களைக் கைப்பற்றி அர்ச்சனை வியாபாரம் நடத்தினாலும். உங்கள் மீதான கனடியப் பொலிசாரின் விசாரணை நிறுத்தப்படவில்லை, இதனால் நேரடியாகவே சூரிய தேவன் தான் எங்கள் கடவுள். ஈழம் தான் எங்கள் சொர்க்கம். துரோகிகளுக்கு நரகம் தான் முடிவு என்ற மதக் கொள்கையோடு புதிய கோவில் ஒன்றைக் கட்டி மதத்தை ஆரம்பிப்பது தான் உங்களுக்கு இருக்கும் ஒரே வழி,
இன்று உங்கள் அலுவலகங்கள் மேல் எல்லாம் அதிரடி நடவடிக்கை எடுத்து ஆவணங்களைக் கைப்பற்றும் பொலிசார் உங்கள் வன்னிக்காட்டு வைரவர் கோவில் கர்ப்பக்கிருகத்திற்குள் நுழையவே முடியாது, குடிவரவுப் பிரச்சனைகளால் வெளியேற்ற அறிவித்தல் பெற்றவர்கள் கோவில்களுக்குள் தஞ்சம் புகுந்தது போல. பொலிசாரால் தேடப்படும் உங்கள் மனித நேயப் பார்வையாளர்களுக்கு உங்கள் கோவிலில் தஞ்சம் வழங்கினால். பொலிசார் அந்தப் பக்கம் தலைக்கறுப்புக் காட்டவே முடியாது,
இன்றைக்கு பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு வழங்கியதாக குற்றம் சாட்டி உங்களுக்கு வரிச்சலுகை தகுதி அளிக்க மறுத்த அரசு. உங்களுக்கு மத நிறுவனங்களுக்கான நன்கொடைகளுக்கு வரிவிலக்கு அளிக்கும் வசதியைத் தரும், பிறகென்ன அர்ச்சனைக்கு ஐம்பது டொலர் கொடுத்தால் மாதகல் விண்ணன்; ஐயாயிரம் டொலருக்கு வரிப் பற்றுச்சீட்டுத் தர. இன்று கனடாவில் பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி செய்வதைத் தடை செய்த அதே அரசே. கோவிலுக்கு நீங்கள் செய்த நன்கொடைக்காக. உங்கள் தாராள மனதைப் பாராட்டி வரிச்சலுகை மீதிப் பணத்தை தொகையாக அனுப்பி வைக்கும்,
அப்புறமாய். முயக்கம் முன்பக்கத்தில் போடும் பிரபாகரன் ஆண்டின் புதுவருடத்தன்று. அதுதான் தலைவரின் பிறந்தநாள் அன்று. ஐம்பது டொலர் அர்ச்சனை ரசீதைக் காட்டி. கைவிசேசச் சில்லறை வாங்க நீங்கள் முண்;டியடிக்கலாம், சொந்தக் கோவில் கட்டி. ஓகோ என்று வியாபாரம் நடத்தும் ஐயர்மார்கள் சூரியதேவனைச் சேவிக்க மறுத்தாலும். கவலையே வேண்டாம், அதற்குத் தயாராக உங்களிடம் இப்போது நிறையக் கிறிஸ்தவ சேவியர்கள் நிறையவே உள்ளனர், இந்துக் கோவில்களில் ஏடு தொடக்கி வைக்கும் அவர்கள் கைவிசேசத்துடன் யேசுவின் ஆசீரையும் அள்ளித் தருவார்கள்,
கோவில் திருவிழாவைச் சாட்டி இந்தியர்கள் போல. ஈழ ரத யாத்திரா நடத்தலாம், தலைவரின் படத்தை தேரில் வைத்து நினைத்த இடமெல்லாம் இழுக்கலாம், சீக்கியர்கள் வாளோடு கலாசார நிகழ்ச்சி நடத்துவது போல. நீங்களும் தமிழரின் தேசிய ஆயுதமான ஏகே 47. கனடியத் தமிழரின் பாரம்பரிய ஆயுதமான பேஸ்போல் மட்டை போன்றவற்றைச் சுழற்றி வீசி தமிழ்ப் பண்;பாட்டுப் பாரம்பரியம் காக்கலாம், ஐரிஸ்;காரர்கள் போல. அலங்கார ஊர்தியும் கட்டி. ரொறன்ரோவின் ஓரினச் சேர்க்கையாளர் ஊர்வலம் போல. பறவை முனியம்மாக்களும் முகாபேக்களும் ஆபாசக் குலுக்கல் நடனமும் செய்யலாம்,
இன்று உங்களுக்கு கூட்டம் நடத்த அனுமதி மறுக்கும் அதே பொலிசார் உங்கள் மத. மனித உரிமையைப் பாதுகாக்க தாங்களாகவே உங்களுக்குப் பாதுகாப்புத் தருவார்கள்,
இஸ்லாமியர்கள் சந்திக்கும் போதெல்லாம். நபியின் பெயரைச் சொல்லும் போது. அவர் பெயரில் சமாதானம் உர்ண்டாவதாக என்பது போல. நீங்களும் சந்தித்துக் கொள்ளும் போது. சூரியதேவன் பெயரைச் சொல்லும்போது ஷஅவர் பெயரில் யுத்தம் உண்டாவதாக என்று ஆளை ஆள் குசிப்படுத்திக் கொள்ளலாம்,
இன்னும் ஒருபடி மேலே போய். வன்னிக் காட்டு வைரவருக்கு கிடாய் கூட வெட்டலாம், அன்னை கனவில் தோன்றி அருள் பாலித்தாள் என்று உங்களுக்கு அருள் பாலிக்கும் கனடியன் இந்து மதபீடாதிபதி போல. நீங்களும் முயக்கத்துப் பைத்தரவளி மூலமாய் பகுத்தறிந்து சூரிய தேவன் பக்தர்களின் கனவில் தோன்றி. கோவில் இறைச்சி சாப்பிட்டால் வற்றாத செல்வம் பெருகும் என்று கூறியதாக அருள் வாக்கு மொழிந்தால். கனடாவில் தமிழர்களின் ஏகோபித்த அபிமானத்தைப் பெற்ற ஆட்டிறைச்சியின் ஏகபோக உரிமை உங்களுக்குக் கிடைக்கும், நீங்கள் நினைத்த நேரமெல்லாம் கடை பூட்டப்படும் என்று உள்ளே போய் நோட்டீஸ் ஒட்டினாலும். மூட மறுக்கும் அல்லது தயங்கும் கடைக்காரர்களுக்கு கோவில் கலால் இறைச்சி தரமாட்டோம் என்று மிரட்டியே கடைகளை மூட வைக்கலாம்,
உங்கள் வருமானத்தைக் கோயிலோடு மட்டும் நிறுத்திக் கொள்ள விரும்ப மாட்டீர்கள் என்பது தெரிந்தது தான், பணம் புரளும் எந்த யாவாரத்திலும் நீங்கள் முதலிடத் தயங்க மாட்டீர்கள் என்பதும் தெரியும், எனவே. திருட்டுச் சாமியார்களுக்கும் உங்களுக்கும் பிடித்த மஞ்சள் சிவப்புக் காவியர்pந்து உங்கள் சூரியதேவனையே விசாப் பிரச்சனை இல்லாமல். பெரியம்மா அல்லது அம்மம்மா சாமி என்று கனடாவுக்கு கூட்டி வந்து பக்த கோடிகளுக்குத் தரிசனம் தந்து. மற்றச் சாமிமாரின் பிழைப்பில் மண்ண்ப் போடலாம்,
வன்னியிலிருந்தபடியே ஒரு புலனாய்ந்து கனடியத் தமிழர்களின் பூர்வீகம் பற்றிய தகவல்களை அறிந்து வைத்திருக்கும் பொட்டம்மானை. அந்தத் தகவல்கள் அடங்கிய கம்பியூட்டர் ஏட்டுடன் கூட்டி வந்து. எக்லின்ரன் வீதியில் உள்ள உங்கள் சந்தையின் பேஸ்மென்டில் குடியிருத்தி. யுத்த காண்டம் வாசிக்கும் புலியூர் ஜொஸ்யர் என்று பகுத்தறிவு முயக்கத்தில் விளம்பரமும் செய்யலாம், ஒரு புலனை வைத்தே கனடியத் தமிழர்களின் சகல தகவல்களையும் அறிந்து வைத்திருக்கும் பொட்டம்மான். தன் ஐம்புலனையும் ஆய்வு செய்து இந்தக் கனடியத் தமிழர்களின் எதிர்காலத்தை துல்லியமாகவும் அச்சொட்டாகவும் ஷஏட்டில் படித்துச் சொல்ல. எதிர்ப்புறமாய் உள்ள அஞ்சு கையான் வீடியோவின் திறப்புவிழாவுக்கு வந்த விஜயகாந்தைப் பார்க்க பொங்கி எழுந்து அலையெனத் திரண்ட தமிழர்கள் போல. பொட்டம்மானிடம் காண்டம் வாசிக்க ஒரு கூட்டம் பொங்கி வராதோ
உங்கள் கோவில் திருவிழாவில் புலிகளின் தொலைக்காட்சியின் முன்னணி நட்சத்திரங்களான இளம்திரையன் நடேசன் ஜோடியை அழைத்து வந்து அறுக்கப் போவது யார் என்றும் வெட்கத்தை விட்டு சினிமா நடிகைகளைக் கூட்டி வந்து குலுக்கப் போவது யார் என்றும் நீங்கள் கலைநிகழ்ச்சி நடத்தியும் காசு சம்பாதிக்கலாம்,
கோயிலிலே அன்னதானத்தையும் கொடுத்தால். முழுமையான தமிழர்களும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து. மாதாமாதம் உங்களுக்கு வங்கிக் கணக்கில் கழிக்கும் சிரமம் இல்லாமல். அவர்களின் மாதச் சம்பளமும் சமுக உதவிக் கொடுப்பனவுகளும் உங்கள் வங்கிக் கணக்குக்கே வரச் செய்து. நீங்கள் வழங்கும் சேவைகளுக்கான பணத்தைக் கழித்துக் கொண்டு. எச்ச சொச்சமாய் மிச்சமீதம் ஏதாவது இருந்தால் அவர்களுக்கு பட்டுவாடாவும் செய்யலாம்,
சரி. நீங்கள் சூரியலோக பதவி அடைந்தாலும். அங்கே எமனும் சித்திரகுப்தனும் போல. சூரியதேவனும் பொட்டம்மானும் வாசலில் இருந்து நீங்கள் இயக்கத்திற்கு பணம் கொடுத்த காட்டைப் பார்த்து செக்கிங் இல்லாமல் சொர்க்கத்துக்கு உள்ளே விடுவார்கள், அத்தோடு. பணம் கொடுக்காத துரோகிகளை முடிவில்லா எரிநெருப்பு நரகத்துள் தள்ள. அவர்கள் போடும் கூக்குரலும் அபயக்குரலும் உங்கள் காதுகளுக்கு எட்டி உங்களுக்கு முடிவில்லாப் பேரின்பம் உண்டாகாதோ
இந்த மணியான ஐடியாவை நடைமுறைப் படுத்தினால். சர்வதேச அரசுகள் எதுவுமே உங்களைத் தடை செய்யவும் முடியாது, கைது செய்யவும் முடியாது, ஆனால். மதம் என்ற ரீதியில் உங்களை உங்களை அங்கீகரிக்க வேண்;டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படும்,
இந்த ஐடியாவைக் கேட்டதும் உங்கள் வாயூறத் தொடங்கியிருக்கும், இருந்தாலும். பொங்கி முடிந்ததும். மீண்டும் யாராவது சொறியும் வரைக்கும். உங்களுக்கு நித்திரை மயக்கம் வேறு போட்டு ஆட்டத் தொடங்கியிருக்கும், ஐயா. உங்களுக்கு எல்லாம் சூடு. சுரணை இருக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை, சரி. பொங்கி முடிச்சுது. புக்கையைத் திண்டிட்டு மொய்ப்பில் திரும்பவும் தூங்கப் போவதற்கு முன்னால் ஒரு சின்ன விசயம்,,,
இந்தியாவையும் பகைத்து. ஐரோப்பியசமூகத்தையும் பொறுமையிழக்கச் செய்து. நோர்வே கூட ஏன் நாயே என்று கேட்காமல் கைவிட்ட நிலையில்,,, யாருமே கிடைக்காமல். ஏக பிரதிநிதிகள் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு என்றெல்லாம் சுய இன்பம் கண்;டதாலோ என்னவோ. இத்தனை உண்ர்ச்சி பொங்கியும் வன்னியில் எழுச்சி காண் முடியாமல் வீரியம் குறைந்திருக்கிறது, இளமையில் வயதுக் கோளாறினால் செய்த தவறுகள் காரணமாய் ஏற்பட்ட இந்த வீரியக்குறைவுக்கு தேவைப்படுதெல்லாம் குமுதத்தின் அட்டையின் பின்புறத்தில் வரும் சித்த வைத்தியர்களின் அஜமாமிச லேகியங்களும் அல்ல, தமிழ்நாட்டில் இருந்து வரும் சுத்தப் பைத்தியங்களின் வாய்வெட்டுக் காவியங்களும் அல்ல?
தற்போதைய தேவை,,, பொங்குதமிழ் மா வயாகரர்கள் சே,, மாவீரர்கள், இன்று தலைவருக்குத் தேவைப்படுவதெல்லாம் உங்கள் பொங்குதமிழ்க் கோசங்கள் அல்ல, அவருக்கு தேவை சதுர உதவி? செந்தாமரை கூட. உப்புச் சப்பில்லாத செய்திக்கு நடுவில். வன்னியில் மக்கள் பங்கர் வெட்டிக் கொண்டிருக்கும் செய்தியை அவிழ்த்து விட்டிருக்கிறது, அங்கு பங்கர் வெட்டும் மக்கள் எல்லாம் உங்களைப் போல புளிச்சல் ஏவறை விளையாட்டுக் காட்ட. பொங்கி எழுந்து போயிருக்க மாட்டார்கள். துப்பாக்கி மிரட்டலுக்குப் பயந்து தான் வேறு வழியின்றி யுத்தமுனையில் உயிர் ஆபத்துக்கும் மத்தியில் பங்கர் வெட்டுகிறார்கள் என்ற உண்மை உங்களுக்குத் தெரியாமல் இருக்காது,
உங்கள் ஊடகங்களின் கணக்குப்படி உலகம் முழுவதும் குறைந்தது இரண்டு லட்சம் பேர் பொங்கி எழுந்திருக்கிறீர்கள், அதில் ஒரு வீதம்,, ஒரே ஒரு வீதம் மட்டும்,, நூறு பேரில் ஒருவருக்கு தமிழுணர்வோடு இருந்தால். இரண்டாயிரம் பேர் இப்போதே புறப்படுங்கள், வேண்டாம், ஆயிரம் பேரில் ஒருவருக்கு இருந்தால். இருநூறு பேர் புறப்படுங்கள்,
அதோ அந்தப் பறவை போல பாட வேண்டும் என்று பாடிக் கொண்டு எங்கள் சொந்த நாட்டுக்கு செல்வது எப்போது என்று குமுறிக் கொண்டிருக்கும் அந்த ஆயிரத்தில் ஒருவன்கள் யாராவது வன்னி சென்று போராடத் தயார் என்றால்,, இந்த வீணான சொறிதல்களை விட்டு விட்டு அவர்களின் வன்னிப் பயணத்துக்கான செலவுகளுக்காய் உண்டியல் தூக்கவும். அந்த மீதி முக்கால்வாசித் துரோகிகளையும் கூட்டிக் கொண்டு. பேரணி நடத்தி உங்களை வழியனுப்ப வரவும் கியூறியஸ் தயார்? நீங்கள் தயாரா
நன்றி: தாயகம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment