Tuesday, August 5, 2008

புலம்பெயர் வாழ் தமிழர்களின் கவனத்துக்கு...... (பகுதி.1)

பா. சத்தியா.

ஒரு ஆபத்தான நேரத்தில்கூட மனிதன் தன்னை காப்பாற்றிகொள்ள முடியாமல் இருக்கின்ற நிலையானது மனித உரிமை மீறல்களின் உச்சக்கட்ட நிலையாகும்.

இந்த நிலைதான் இன்று படையினரின் வன்னிபிரதேச மீட்பு நடைவடிக்கையின் மூலம் மன்னார், முல்லைதீவு மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்த மக்கள் கிழிநொச்சியில் மரநிழல்களில் தங்கியிருப்பதானது. இந்த மக்கள் அரசகட்டுபாட்டு பகுதிக்கு வருவதற்கு எவ்வளவோ முயற்சிசெய்கிறார்கள் ஆனால் புலிகள் அவர்களை விடுவதாயில்லை. தங்களுடைய பாதுகாப்புக்கு அரண்களாக வைத்திருப்பதற்காக அவர்களை எங்கும்போகவிடாமல் தடுத்துவைத்திருக்கிறார்கள். இந்த மக்கள் புலிகளால் வலுகட்டாயமாக இடம்பெயரவைக்கப்பட்டு கிழிநொச்சியில் கொண்டுபோய் மரநிழல்களில் விடப்பட்டுள்ளார்கள்.

சந்திரிக்கா அம்மையார் ஐனாதிபதியாக இருந்த காலத்தில் இதேபோன்றுதான் யாழ்குடா நாட்டை அரசபடையினர் கைப்பற்றும்பொழுது புலிகள் யாழ் நகர எல்லைகுள் வசித்த மக்களை வலுகட்டாயப்படுத்தி எழுப்பிகொண்டுபோய் தெனமராட்சி பகுதிகளில் கொண்டுபோய் நிர்கதியாக விட்டுவிட்டு தாங்கள் மட்டும் தப்பினால் காணும் என்று வன்னிக்கு ஓடிபோனவர்கள்.

வன்னிக்குள் இடம்பெயர்ந்த ஒரு இலச்சத்துக்கும் மேட்பட்ட மக்களுக்குரிய அடிப்படைவசதிகளை கூட புலிகள் செய்துகொடுக்வில்லை. அதாவது ஒருநேர கஞ்சியைகூட அவர்களால் கொடுக்க முடியாது. ஆனால் புலிகளால் எதிரி அரசாங்கம் என்றுசொல்லபடுகிற சிறிலங்கா அரசாங்கம்தான் இன்று அரசசெயலர்கள் மூலம் அந்தமக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்துகொடுத்து கொண்டிருக்கிறது.

இன்று கிழிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள அகதிகளுக்கு அந்த மாவட்ட அரச அதிபர் வேதநாயகம் நாகலிங்கம்தான் அந்த மக்களுக்குரிய அடிப்படைவசதிகளை செய்து குடுத்துக் கொண்டிருக்கிறார். புலிகளுக்கு இப்படி அரசாங்கம் உதவிசெய்வதுகூட பிடிக்காது அதனால்தான் அரச செயலக உத்தியோகத்தவர்களை புலிகள் கிளைமோர் குண்டுவைத்து படுகொலை செய்துவிட்டு சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையணி செய்வதாக புலியூடகங்களில் பிரசுரிக்கிறார்கள்.

சமதான காலத்தில் புலிகள் ஏ9 பாதையில் வைத்து பல கோடிக்கணக்கான ருபாய்களை வரியென்றும், கப்பம் என்றும் வசூலித்தார்கள். புலம்பெயர் நாடுகளில் அன்றும் சரி, இன்றும் சரி புலிகள் தமிழர்களிடமிருந்து பெருந்தொகையான பணத்தை வசூலித்துக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் புலிகள் இதுவரை தமிழர்களுக்கு ஒரு கிலோ அரிசியை தன்னும் கொடுத்ததாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களோ?

இன்று இடம்பெயர்ந்து கிழிநொச்சியில் மரநிழலில் வாழும் மக்களுக்கு ஒருநேர உணவை தண்ணும் புலிகள் கொடுப்பதாக எதாவது செய்திகளையாவது நீங்கள் கேள்விப்படுகிறீர்களா? புலிகள் வேணுமானால் தமிழனின் உயிரை எடுப்பார்களே தவிர தமிழர்களுக்கு எந்தவித உதவியையும் செய்யமாட்டார்கள். இதுவரை புலிகளால் மூன்று சகாப்தகாலங்களுக்கு மேலாக தமிழர்கள் துன்பங்களையும் துயரங்களையும் கண்டதுதான் மிச்சமே ஒழிய வேறு ஒன்றையும் தமிழன் இதுவரை கண்டது கிடையாது.

புலிகள் தமிழ் மக்களின் பெயரால் தமிழ்மக்களை பாதுகாக்கிறோம் என்று சேர்த்த நிதியை தங்களுடைய சுயதேவைகளுக்கு பாவித்தார்களே ஒழிய தமிழர்களுக்கு புலிகளால் சேர்க்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு ரூபாய்தன்னும் செலவழிகப்படவில்லை. இதுதான் உண்மை நிலைமையாகும். வன்னியில் இருக்கும் புலிபிரமுகர்கள் எல்லோரும் 'வசதியான வாகனங்களில் ' தான் பயணம்செய்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள், சகோதரங்கள் யாபேரும் வெளிநாடுகளில்தான் வாழ்கிறார்கள. அவர்கள் வெளிநாடுகளில் பெரியவசதிகளுடன் வாழ்கிறார்கள்.

வெளிநாடுகளில் புலிகளுக்கு காசுசேர்பவர்கள் கார், வீடு போன்ற எல்லா வசதிகளுடன் வசதியாக வாழ்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு வேலை, வெட்டி எதுவும் கிடையாது. எப்படி இவர்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்பதை புலிகளுக்கு மாதாந்தம் கப்பமாக பணம்கொடுக்கும் புலம்பெயர் தமிழர்கள் கொஞ்சம் சிந்திக்கவேண்டும். வெளிநாடுகளில் புலிகளுக்கு சேர்கப்படுகின்ற காசு இரண்டுபகுதியினரை சேர்ந்தடைகிறது

1. ஆயுதம் விற்கும் அன்னிய நாட்டினரிடம்
2. வன்னியில் உள்ள புலிபிரமுகர்களின் சுகபோக வாழ்கைக்கும், வெளி நாட்டில் உள்ள புலி முகவர்களின் சுகபோக வாழ்கைக்கும்.

தமிழர்களுக்கு புலிகள் கிணற்றில் இருக்கும் தண்ணீரை அள்ளிக்கொடுத்தாலே புலியூடகங்களில் அது பெருசாக படம்போட்டு பிரசுரித்து காட்டுவார்கள் வன்னிவாழ் மக்களுக்கு அரசாங்கம் எவ்வளவோ உதவிகள் செய்து கொண்டிருக்கிறது அவற்றை எல்லாம் புலியூடகங்கள் படம்பிடித்து காட்டமாட்டார்கள்.

புலிகளின் போராட்டமானது தமிழர்களை அடிமை படுத்திவைத்துக்கொண்டு பிழைப்பு நடத்துவதாகும் இதுதான் அவர்களின் போராட்டமாகும். இதை தவிர வேறு இலச்சியம் புலிகளுக்கு இல்லை. இந்த புலிகளின் போராட்டத்தை எந்த நாடும் ஏற்க்கொள்ளப் போவதில்லை. முதலில் பகுத்தறிவுள்ள எந்த தமிழனும் இந்த புலிப்பயங்கரவாத போராட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டான். தமிழீழ மக்கள் புலிகளை விரும்பவில்லை. தமிழீழத்தில் வாழும் தமிழர்கள் புலிகளின் கட்டுபாட்டு பிரதேசங்களில் போய் வாழ்வதற்கு எந்த ஒரு காலத்திலும் விரும்பமாட்டார்கள். அதனால்தான் வன்னி வாழ் மக்களை வெளியில் விடாமல் புலிகள் அடிமைபடுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆபிரிக்க நாடுகளில்கூட போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தப்பிபோவதற்கு உரிய வழிவகைகள் இருக்கிறது. ஆனால் வன்னிவாழ் மக்கள் புலிகளிடமிருந்து எங்குமே தப்பித்து போகமுடியாது. மனிதவுரிமைகளை பற்றி கூக்குரலிடும் சர்வதேச சமூகம் இவற்றை எல்லாம் வெறுமனே பார்த்து கொண்டிருப்பதேன்?


வன்னிவாழ் மக்களை காப்பாற்றுவதற்கு உண்மையான புலம்பெயர் தமிழர்கள் முன்னுக்கு வரவேண்டும் அல்லாவிட்டால் வன்னியிலிருக்கும் மூன்று இலச்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் வீணாக பலியாகிபோவார்கள்.

இலக்கியா

No comments: