Sunday, August 3, 2008

புலி உறுப்பினர் தம்பியண்ணா கைதையடுத்து புதுகை முகாமில் இருந்த 100 அகதிகள் மாயம்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியி ருந்த 100 பேர் மாயமாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங் கலம் அருகே உப்பூரில் கியூப் பிரிவு மற் றும் உள்ளூர் பொலிஸார் நடத்திய வாக னச் சோதனையின்போது, இலங்கைக்குக்கடத்திச் செல்லப்படவிருந்த ஏராளமான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந் தப் பொருள்களை அவர்களுக்கு வாங்கிக் கொடுத்தது யார் என்பது பற்றிப் பொலிஸார் விசாரணை நடத்தியதில், சென்னையில் பதுங்கியிருந்த விடுதலைப் புலிகளின் தளபதி டேனியல் (வயது 46) கடந்த புதன்கிழமை கைதுசெ#யப்பட்டார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் மையமாகக் கொண்டு செயற்பட்டவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம்தோப்புகொல்லை, அழியாநிலைதேக்காட்டூர் ஆகிய முகாம்களில்பொலிஸார் புதனன்று இரவு திடீர்சோதனை மேற்கொண்டனர். அங்கீகார அடையாள அட்டை பெற்றுள்ள 974 குடும்பங்களைச்சேர்ந்த 3,600 அகதிகள் பற்றிய விவரங்களை புதுக்@காட்டை பொலிஸார் சரிபார்த்தனர்.
இந்தச் சோதனையில் நூற்றுக்கும் சேமற்பட்ட அகதிகள், உரிய முகாம்களில் தங்கவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றிப் பொலிஸார் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர்.

No comments: