
விடுதலைப்புலிகளின் ஏஜெண்டு சென்னையில் கைது: பரபரப்பு வாக்குமூலம்
சென்னையில் விடுதலைப்புலிகளின் ஏஜெண்டு கைது செய்யப்பட்டார். இலங்கைக்கு கடத்த முயன்ற தொலைதொடர்பு கருவிகளை போலீசார் அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே உச்சகட்ட போர் நடந்து வருகிறது. இதனால் விடுதலைப்புலிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பொருட்களை கடத்தி செல்லாதவாறு தடுக்கும் பணியில் கியூ பிரிவு போலீசார் தீவிரமாக உள்ளனர்.
தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் கடத்தல் ஏஜெண்டுகளை கியூபிரிவு போலீசார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். தமிழகத்தில் இருந்து டீசல் மற்றும் அலுமினிய கட்டிகள் போன்ற பொருட்களை விடுதலைப்புலிகள் அதிகமாக கடத்தி செல்கிறார்கள்.
இவ்வாறு பொருட்களை கடத்திச் செல்வதற்கு விடுதலைப்புலிகளே தமிழகத்தில் நேரடியாக சில நேரம் வருகின்றனர். விடுதலைப்புலிகளின் கடத்தல் ஏஜெண்டுகளும் தமிழகத்தில் ஏராளமான பேர் உள்ளனர். தமிழகத்தில் ஊடுருவும் விடுதலைப்புலிகளையும் இங்குள்ள கடத்தல் ஏஜெண்டுகளையும் கிï பிரிவு போலீசார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள்.
கடந்த மாதம் 29-ந் தேதியன்று விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர் தம்பிஅண்ணா என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் இருந்து பொருட்களை இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக புதிய விïகம் வகுக்க அவர் சென்னை வந்த போது பிடிபட்டதாக போலீசார் தெரிவித்தனர். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் நூற்றுக்கணக்கான கடத்தல் ஏஜெண்டுகளை வேட்டையாடி பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை ஆகிய பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கடத்தல் ஏஜெண்டுகள் தங்கி இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த பகுதிகளை கண்காணிக்கும்படி டி.பி.ஜி. கே.பி.ஜெயின் உத்தரவிட்டார். ஐ.ஜி. ஜாபர்சேட், டி.ஐ.ஜி. சங்கர்ஜிவால், சூப்பிரண்டு அசோக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் கூடுதல் சூப்பிரண்டு சுப்பிரமணியம், துணை சூப்பிரண்டு சந்திரசேகரன் ஆகியோர் தலைமையிலான கியூபிரிவு போலீசார் மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை பகுதிகளை மாறு வேடத்தில் கண்காணித்தனர்.
மடிப்பாக்கத்தில் உள்ள எலக்ட்ரானிக் கடை ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு தேவையான தொலை தொடர்பு தகவல் கருவிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கண்காணிப்பில் கண்டறியப்பட்டது. உடனே அந்த கடையில் கிï பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
சோதனையில் செல்போன் மூலம் மோட்டார்களை இயக்கும் ஸடார்ட்டர் கருவியும், 50 கிலோ மீட்டர் தூரம் பேசக்கூடிய சக்திவாய்ந்த டெலிபோன் இணைப்பு கருவிகள் 10 (பவர் ஸ்டேஷன், நானோ ஸ்டேஷன்), இன்டர்நெட் போன் அடாப்டர் 9 போன்ற கருவிகள் கைப்பற்றப்பட்டன.
இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பொருட்கள் பிரான்சில் இருந்து கொண்டு வரப்பட்டு இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக எலக்ட்ரானிக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்களை வாங்கி இலங்கைக்கு கடத்தி செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளின் ஏஜெண்டு செல்வம் என்ற செல்வக்குமாரையும் (வயது 31), கியூபிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்தது. அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது அவரிடம் இலங்கையில் இருந்து விடுதலைப்புலிகளின் உளவு பிரிவு தலைவர் ஜீவன் என்ற இனியன் அடிக்கடி பேசி இருப்பது தெரிய வந்தது. போலீஸ் விசாரணையில் செல்வக்குமார் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:-
இலங்கையில் கிளிநொச்சி திருநகர் எனது சொந்த ஊராகும். எனது தந்தை பெயர் பெருமாள். நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். விடுதலைப்புலி இயக்கத்தோடு எனக்கு தொடர்பு இல்லை. ஆனால் அநëத இயக்கத்தை சேர்ந்தவர்களோடு பழக்கம் இருந்தது. எங்கள் ஊரைச் சேர்நëத ஏராளமான இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உள்ளனர். அந்த வகையில் அவர்களோடு எனக்கு பழக்கம் இருந்தது.
இலங்கையில் போர் பெரியளவில் தொடங்கிய போது நான் அடிக்கடி கள்ளத்தோணி மூலம் தமிகம் வந்து சென்றேன். 1997-ல் ஒரு முறை சென்னை வந்தேன்.
அப்போது சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் பாஸ்ட்புட் ஓட்டல் நடத்தினேன். சென்னையில் செயல்படும் அகதிகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பாளராக ஒரு வருடம் வேலை பார்த்தேன். அதன் பிறகு சென்னையில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால் மீண்டும் இலங்கை சென்று விட்டேன். அதன் பிறகு மலேசியாவிற்கு சென்று ஓட்டலில் வேலை பார்த்தேன். கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் மீண்டும் அகதியாக மண்டபம் வந்தேன்.
மண்டபத்திலிருந்து கேளம்பாக்கம் வந்தேன். கேளம்பாக்கத்தில் சுசீலா நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தேன். கேளம்பாக்கத்தில் உள்ள பாஸ்ட்புட் கடையில் புரோட்டா மாஸ்டராக தற்போது வேலை பார்த்து வருகிறேன். தினமும் ரூ.150 சம்பளம் கிடைக்கிறது.
இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் உளவு பிரிவு தலைவர் இனியன் என்னிடம் செல்போனில் பேசினார். அவரும் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்தான். அந்த முறையில் அவர் எனக்கு நண்பராக விளங்கினார்.
இலங்கையில் இருந்து பேசிய இனியவன் விடுதலைப்புலிகளுக்காக தொலைதொடர்பு தகவல் சாதனங்கள் பிரான்சில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதை சென்னை மடிப்பாக்கத்தில் எலக்ட்ரானிக் கடை ஒன்றில் பதுக்கி வைத்திருப்பதாகவும், அவற்றை வாங்கி இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படியும் இனியவன் என்னிடம் கூறினார்.
நான் முதலில் மறுத்தேன். உடனே கிளிநொச்சியில் வசிக்கும் எனது பெற்றோர்களை அவர் மிரட்ட ஆரம்பித்தார். இந்த பொருட்களை வாங்கி அனுப்பா விட்டால் எனது பெற்றோர்களின் உயிருக்கு ஆபத்து என்றும் அவர் பயமுறுத்தினார். இதனால் வேறு வழியில்லாமல் அந்த பொருட்களை வாங்கி அனுப்ப ஒப்புக் கொண்டேன். இந்த வேலையை செய்து முடித்தால் எனக்கு பெரிய அளவில் பணம் தருவதாகவும் இனியவன் கூறி இருந்தார். பொருட்களை அனுப்புவதற்கு முன்பாக போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு செல்வக்குமார் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். செல்வக்குமாரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி தம்பி அண்ணாவை காவலில் எடுத்து விசாரிக்க கிï பிரிவு போலீசார் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இலங்கையைச் சேர்ந்த இருவர் வெடிமருந்துடன் கைது
சென்னை, ஆக. 6: சென்னையில் வெடிமருந்துகளுடன் இலங்கையைச் சேர்ந்த உமா ரமணன் (23), அமலன் (27) ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர். இதுகுறித்த விவரம்: சென்னை திருமங்கலம் திருவள்ளுவர் நகரில் இலங்கைத் தமிழர்கள் இரண்டு பேர் தங்கியிருப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டை பொலிஸார் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை செய்தனர். வீட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உமா ரமணன், அமலன் ஆகியோர் தங்கியிருந்தனர். அவர்கள் அங்கு தங்கியிருப்பதற்கான சரியான காரணத்தைக் கூறவில்லை. அந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்றரை கிலோ பொட்டாசியம் நைட்ரேட் வெடிமருந்தும், சோலார் லைட், ஸ்பார்க் பிளக், ஒயர்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தப் பொருள்களை விடுதலைப் புலிகளுக்கு கடத்துவதற்காக அவர்கள் பதுக்கி வைத்திருக்கலாம் என்று பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடரும் கைது: விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்துவதற்காக தமிழகம் வந்த கடற்புலி தம்பி அண்ணா (எ) டேனியல் கடந்த வாரம் சென்னையில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து எலெக்ட்ரானிக் சாதனங்களுடன் செல்வம் என்ற இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார். தற்போது வெடிமருந்துடன் உமா ரமணன், அமலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரத்தில்... இதே போன்று, கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு ராமநாதபுரத்தில் வெடி பொருள்களுடன் இலங்கையைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேணி இணையம்

No comments:
Post a Comment