இந்திய புலனாய்வு துறையினரின் திடீர் விழிப்புக்கு காரணம் என்ன?: முன்தளம் ஈடாடுவதால், புலிகளுக்கு ஒரு பின்தளம் வேண்டும்? (Tigers need a rear base)
- அர்ச்சுனன்
இலங்கை கடற்படையினர் தமது கடல் பகுதியில் இருந்து 2000 ஆயிரம் கிலோமீற்றர் தூரம் சென்று காத்திருந்து புலிகளின் ஆயுத கப்பல்களை அழித்த போதும் , புலிகளுக்கு தமிழகத்தில் இருந்து எரிபொருட்கள், குண்டு தயரிக்கும் இரசாயண பொருட்கள், சையிக்கிள் போளைகள், படகுகள், தொலை தொடர்பு கருவிகள் , செய்மதி வழிகாட்டிகள் என்பனவெல்லாம் சென்ற வண்ணமே இருந்தன. வெடிகுண்டுகளுக்கு கம்பி ஆணிகள், சையிக்கிள் போளைகள் எல்லாம் தேவை என்பதினை அறியாத அப்பாவி பழ. நெடுமாறன், ஆயுத சந்தையில் ஆயுதங்களை கொள்வனவு செய்யக் கூடிய நிலை இருக்கையில் புலிகள் ஏன தமிழகத்தில் இருந்து சையில் போளைகளை கடத்துகின்றார்கள் என கூறியிருந்தார். புலிகளை இந்திய அரசு தடை செய்த போதும் அவர்கள் தமிழகத்தில் உலாவுகின்றார்கள் என்பது இந்திய புலனாய்வு துறைக்கு தெரியாது இருந்திருக்க முடியாது. மேலும் அவர்களுக்கு உதவும் அனுதாபிகள் எவர்கள் என்பதினையும் அவர்கள் அறியாது இருந்திருக்க முடியாது. இருந்தும் ஏன் இந்திய மத்திய மற்றும் தமிழக புலானாய்வு பிரிவினர் ஒரு வகையான மென்மையான போக்கினை புலிகள் மீது காட்டியிருந்தனர் என்பதினை ஒரு கேள்வியாக கொள்ளலாம். புலிகளுக்கு ஆதரவாக இன்னமும் பேசிக்கொண்டிருக்கும் சில தமிழக கட்சிகளின் தலைவர்கள் மீது இன்னமும் மென்மையான போக்கினையே இந்திய மத்திய அரசு கடைப்பிடித்து வருகின்றது. காஸ்மீர் தீவிரவாதிகளுக்கு நான் புகலிடம் கொடுப்பேன் என இந்த தலைவர்கள் கூறினால் மத்திய அரசு இவர்களை எப்படி பார்த்திருக்கும். தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்காண மக்கள் ஈழத் தமிழர்கள் மீது கொண்டிருக்கும் அனுதாபம் மிகவும் உண்மையானதும், மென்மையானதும் (sensitive issue) ஆகும். அரசியல்வாதிகள் ஈழ தமிழர்கள் மீது அன்பு காட்டுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். ஆனால் மக்களினதும் , புத்திஜீவிகளினதும் அனுதாபம் உள் எண்ணங்கள் எதுவும் இல்லாத அப்பட்டமான உண்மையான அக்கறையுடைய அனுதாபம் என கூறலாம். விடுதலை புலிகளுக்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கைகள் இவர்களை புண்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இந்திய மத்திய ,மற்றும் தமிழக மானில பாதுகாப்பு ஆலோசகர்கள் இதனை மிகவும் அவதானமாக கடந்த காலங்களில் கையாண்டு வந்தனர்.
இப்படியெல்லாம் இருந்த இந்தியாவின் புலனாய்வு துறையினர் ஏன் தற்பொழுது தமிழகத்தில் மறைந்திருக்கும் புலிகளுக்கு வலை விரித்துள்ளன்ர். கடந்த ஒரு வாரத்திற்குள் புலிகளுக்கு ஆயுதம் கடத்தி வந்த முக்கிய பிரமுகரான தம்பியண்ணா, தமிழகத்தில் இருந்து குண்டு தயாரிக்க தேவையான பொருட்களை புலிகளுக்கு கடத்தி வந்த சூசையின் பெறாமகன் உட்பட 8 இற்கு மேற்பட்ட புலிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.அத்துடன் இவர்களுக்கு உதவி புரிந்தார் என்ற சந்தேகத்தில் ஒரு தொழில் அதிபர் தேடப்பட்டு வருகின்றார்.
புலிகள் முன்னாள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவுடன் பேச்சுக்களை நடத்தி பெருமளவான நிதி மற்றும் ஆயுத உதவிகளை பெற்று விட்டு அவரை தற்கொலை குண்டுதாரி மூலம் கொலைசெய்தனர். பின்னர் அதே கட்சியின் அடுத்த தலைவரான ரணில் விக்கிரமசிங்காவை நம்பவைத்து அவருடனும் பேசி புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திட்டனர். இதே போன்று ராஜீவ் காந்தியினை கொன்றுவிட்டு ஜனதா கட்சியுடன் நட்புறவினை மேற்கொள்ளலாம் என்றெல்லாம் புலிகள் நம்பியிருந்தனர். இந்திய தலைவர்கள் இலங்கையினை போல் அல்லாது ராஜிவ் காந்தியினை தமது நாட்டின் தலைவனாக பார்த்தார்களே தவிர காங்கிரஸ் கட்சியின் தலைவனாக பார்க்கவில்லை. இதனால் ராஜிவ் காந்தியின் படுகொலைக்கு பின்னர் புலிகளினால் இந்திய உயர்மட்ட தலைவர்களுடனோ, அல்லது உளவுதுறை மட்டங்களுடனோ உறவுகளை பேண முடியாது போய்விட்டது. தமிழகத்தில் மக்கள் மத்தியில் ஆதரவற்ற சில அரசியல் தலைவர்களை மட்டுமே அவர்களினால் வாங்க முடிந்தது. இவர்களுக்கு புலிகள் கொடுக்கு நிதி உதவிகளினால் புலிகள் மீது மட்டும் அக்கறை காணப்பட்டதே ஒழிய ஈழத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் பன்முக அரசியலில் நம்பிக்கை இல்லாதவர்களை, மாற்றுகருத்து கட்சிகளின் தலைவர்களையும் உறுப்பினர்களையும் கொலை செய்யும் ஒரு அமைப்பிற்கு ஆதரவாக இவர்களினால் எப்படி பேச முடியும்.
தமிழகத்தில் இதுவரை காலமும் மறைமுகமாக செயல்பட்டு வந்த புலிகளையும் அவர்களுக்கு உதவிபுரிந்தவர்களையும் பெரிதும் கவனிக்காது ,புலிகள் மீதான தடையில் மென்மையாக போக்கினை கொண்டிருந்த இந்திய மத்திய, மானில உளவுத் துறைகள், தற்பொழுது அவர்களின் வலைப்பின்னல்களை தேடி வலை விரிப்பதற்கு அவசியம் என்ன?
இலங்கையின் வடக்கே புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் படிப்படியாக அரச படைகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. நாட்டு பிரதேசத்தினை விட்டு காட்டு பிரதேசங்களுக்குள் புலிகள் செல்லவேண்டியம் கட்டாயம் ஏற்பட்டு வருகின்றது. இலங்கை அரச படைகளின் கைகள் முற்றாக ஓங்கி ,முல்லைதீவுக்கு ஆபத்து வருமானால் ! புலிகளுக்கு மீண்டும் ஒரு பின்தளம் வேண்டும். அந்த பின்தளம் தமிழகமாகவோ, கேரளம் ஆகவோ இருந்து விடக்கூடாது என்பதற்காக இந்திய உளவுத்துறை உசார் ஆகி இருக்கின்றது. தமிழ் ஈழத்தை பெற முடியவில்லையானால் ,தமிழகத்தை குழப்புவோம் என்ற புலிகளின் நோக்கம் இந்திய புலனாய்வு துறைக்கு விளங்கியுள்ளது. இதனால் தற்பொழுது விழித்துக் கொண்டுள்ளது.
மதுரை அகதி முகாமில் கைதான புலி உறுப்பினர் சூசையின் பெறாமகனாவார் (nephew) !
மதுரை மாவட்டதில் உள்ள அகதி முகாமில் வைத்து கடந்த திங்கட் கிழமை(2008-08-04) கைது செய்யப்பட்ட கிருஷ்ணநவனீதன் ,புலிகளின் கடல் படை தளபதியான சூசை என்று அழைக்கப்படும் சிவனேசனின் சகோதரரின் மகன் என தமிழக பொலிசார் தெரிவித்தாக என்.டி.ரி.வி (NDTV) தனது பிரதான செய்தியில் தெரிவித்துள்ளது. கிருஷ்ணநவனீதனின் சகோதரர் ஆன விஜயனீதன் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி கீழக்கரைக்கு அண்மித்து உள்ள உப்பூர் எனும் இடத்தில் இருந்து புலிகளுக்கு பொருட்களை கடத்த முட்பட்ட பொழுது கைது செய்யப்பட்டு இருந்தார். இவர் கொடுத்த தகவலை அடுத்தே இவரின் சகோதரர் ஆன கிருஷ்ணநவனீதன் திங்கட் கிழமை கியூ பிரிவு புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டார். உப்பூரில் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி விஜயனீதன் கைது செய்யப்படும் பொழுது அவரிடம் இருந்து சுவிஸ் நாட்டு தயாரிப்பான தொலை தொடர்பு கருவிகள், 10 செய்மதி வழிகாட்டிகள் , குண்டு துளைக்காத கவச அங்கிகள், மின் வேகத்தினை அளவு செய்யும் கருவிகள் என்பன கைப்பற்றப்பட்டதாக தமிழக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இவருடன் ரக்ஷநந்தன், சிவராமன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் கடந்த காலங்களில் தமிழகத்தில் இருந்து புலிகளுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வந்துள்ளார்கள் என விசாரனையின் போது தெரிவித்துள்ளது. தமிழக பொலிசார் இவர்கள் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், அண்மையில் கைது செய்யப்பட்ட 5 புலி உறுப்பினர்களும் சகல ஆயுதங்களும் இயக்க கூடிய வைகையில் பயிற்ச்சி பேற்றதுடன் பாக்கு நீரினை மற்றும் இந்திய - இலங்கை கடற்கரைகள் குறித்து மிகவும் பரிச்சயமானவர்கள் என தெரிவித்து உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாதவூர் அகதிகள் முகாமில் அகதியாக தன்னை காட்டிக் கொண்டிருந்த நவனீதன், அகதி முகாம் மற்றும் ஏனைய தமிழகம் எங்கும் உள்ள புலிகளின் விசுவாசிகள்,அனுதாபிகளை திரட்டி அவர்களூடாக தொடர்புகளை ஏற்படுத்தி தமிழக மற்றும் கேரள கடற்கரையூடாக புலிகளுக்கு வெடிபொருட்கள் மற்றும் ஏனைய கருவிகளை அனுப்பி வந்துள்ளார். இவர்களுக்கு உதவி புரிந்த ராமநாதபுரத்தினை மையமாக வைத்து வியாபாரம் செய்து வரும் தொழில் அதிபர் ஒருவரை தாம் தேடி வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (2008-08-02) மண்டபம் கடற்கரை பகுதியில் அகதிகள் முகாமிற்கு அருகாமையில் அனாதரவாக ஒரு பிலாஸ்ரிக் (plastic) படகு விடப்பட்டு இருந்ததினை பொலிசார் அவதானித்து இருந்தனர். இது தொடர்பாக விசாரனை மேற்கொண்டவேளை 39 வயதுடைய புலி உறுப்பினரான முரளீதரன் என்பவரே இந்த படகில் வந்தாக தெரியவந்தது. மண்டபம் முகாமிற்கு சென்ற பொலிசார் இவரை கைது செய்ததுடன் இவர் வெள்ளிகிழமை இரவும் மண்டபம் கடற்கரையினை வந்து சேர்ந்ததினையும் அறிந்து கொண்டார்கள். தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவாக பிரட்சாரம் செய்து வரும் சில கட்சிகளின் தலைவர்கள் சிலருடன் கைது செய்யப்பட்ட புலிகள் தொடர்புகளை கொண்டிருந்தாக செய்திகள் கசிந்துள்ளன.
தேணி இணையம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment