Monday, August 11, 2008

கிளாலியிலும் நேற்று மோதல்

இராணுவத்தினர் தமது கிளாலி முன்ன ரங்க நிலையில் இருந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு முன்னேறி விடுதலைப்புலி களின் முன்னரங்க நிலைகள் மீது தாக்கு தல் நடத்தினர்.
இத்தாக்குதலை அடுத்து அங்கு மோதல் ஒன்று வெடித்ததாக படைத்தரப்பினர் தெரிவித்தனர்.
இந்த மோதலில் விடுதலைப்புலிகளின் 15 உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் என்றும் படையினருக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் பாதுகாப்புத்தரப்பு நேற்றிரவு அறிவித்தது.
எனினும் கிளாலியில் படையினரின் முன்னரங்க நிலைகளுக்குள் விடுதலைப் புலிகள் ஊடுருவித்தாக்குதல் நடத்திய தாகவும் அதன் பின்னரே மோதல் வெடித் தது என்றும் சுயாதீனத் தகவல்கள் தெரி வித்தன.

No comments: