மணலாறில் வெலிஓயாவில், நாயாறு கடலேரிக்குத் தெற்கே நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் விடுதலைப்புலிகளின் பிரதேசத்திற்குள் தாம் முன்னேற முயன்ற வேளை அங்கு கடும் மோதல்கள் வெடித்த தாகப் படைத்தரப்புத் தெரிவித்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம் பெற்ற இந்த முன்னேற்ற முயற்சியை அடுத்து விடுதலைப்புலிகள் சில மணி நேரத்தில் பின்வாங்கிவிட்டனர். 15 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர் என இரா ணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமது தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் விடுதலைப்புலிகள் உறுப்பி னர்கள் ஏழுபேரின் ஆண்களின் சடலங் களையும் ஆயுதங்களையும் மீட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மோதல் குறித்து புலிகள் தரப்புத் தகவல்கள் நேற்றிரவுவரை வெளியாக வில்லை.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment