Thursday, August 7, 2008

பாதுகாப்பில் திடமான நம்பிக்கை கொண்டமையினாலேயே நாராயணன் வாடகைக் காரில் ஹோட்டல் சென்றார்

கொழும்பில் இடம்பெற்ற 15ஆவது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் அரசாங்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கொண்டிருந்த திடமான நம்பிக்கையின் காரணமாகவே வாடகைக் காரின் மூலம் ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அத்துடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின் ஒருவகைத் தந்திரமேயாகும் என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments: