Tuesday, August 5, 2008

புலிகளின் தாயகம் கிளிநொச்சி கைப்பற்றப்படும்


விடுதலைப் புலிகளின் தாயகம் என கருதப்படும் கிளிநொச்சியை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்டு வரும், படை நடவடிக்கை மேலும் உக்கிரமடையலாம் என அரசாங்க பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கேஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எந்த சக்தி வந்த போதிலும் ஆத்ம பலத்துடனும், நம்பிக்கையுடனும் கிளிநொச்சியை விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகள் கிளிநொச்சியில் மக்களை கேடயங்களாக பயன்படுத்தும் நோக்கில் மக்களை அங்கு ஒன்றுதிரட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளது. இதேவேளை கிளிநொச்சி பிரதேசத்தில் தற்போது நிலவும் போர் பதற்றம் காரணமாக அங்குள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும். பிரதேசமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளனர் எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

No comments: