Sunday, August 3, 2008

ராஜீவ்காந்தி கொலையில் சதிகாரர்கள் சிக்கவில்லை


சிறையில் இருக்கும் நளினி பரபரப்பு பேட்டி



"என் மகள் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆக வேண்டும் என்பதே என் ஆசை'' என்று ராஜீவ் கொலையாளி நளினி கூறி உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் நளி னிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவி சோனியா தலையீட்டின் பேரில் இந்த தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நளினி இப்போது வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

நளினியின் கணவர் முருகனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நளினிக்கு சிறையிலேயே குழந்தை பிறந்தது. மெகரா என்ற அந்த குழந்தைக்கு இப்போது 15 வயது ஆகிறது. மெகரா இப்போது தனது தாத்தா, பாட்டியுடன் இலங்கையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் நளினி பேட்டி அளித்தார்.

தனது வக்கீல் இளங்கோவன் மூலம் நளினி அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது. ராஜீவ் கொலைக்காக நான் மிக வும் வருந்துகிறேன். ராஜீவ் காந்தி ஒரு பெரிய தலை வர். அவரது மறைவு இந்தி யாவுக்கு பெரிய இழப்பு. அவர் கொல்லப்பட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட சிவராஜன், சுபா, தணு ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இந்த கொலையில் மேலும் சில சதிகாரர்கள் இன்னும் சிக்க வில்லை.

கடந்த மார்ச் மாதம் சோனியா மகள் பிரியங்கா என்னை சந்தித்தார். இது சரித்திர நிகழ்வு. சோனியா காந்தியும் அவரது குடும்பத்தாரும் என் மீது மிகுந்தபரிவு காட்டினார்கள்.

என் மகள் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆக வேண்டும் என்பதே எனது ஆசை. இப் போது என் மகள் இலங் கையில் வசித்து வருகிறார்கள். ஜெயிலில் இருந்து நான் எப்போதாவது விடுதலை ஆனாலும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று நான்பயப்படவில்லை.

இவ்வாறு நளினி கூறினார்.

No comments: