Wednesday, August 6, 2008

வன்னியின் முக்கிய நகரங்களை நெருங்கியிருக்கும் படைதரப்பு:

பாரிய பதில் தாக்குதல் எப்போது நிகழப் போகிறது என்பது தான் எவருக்கும் தெரியாத புதிராக உள்ளது.

மன்னார் வவுனியா போர் அரங்குகளில் தற்போது படையினரின் முன்னகர்வு அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 16ஆம் திகதி விடத்தல்தீவைக் கைப்பற்றிய படையினர், அங்கிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள இலுப்பைக்கடவையை 20ஆம் திகதி காலையில் கைப்பற்றியிருக்கின்றனர்.இன்னொரு முனையில் வவுனிக்குளத்தின் மேற்குப் பகுதியில் 10 ச.கி.மீ பரப்பளவை கடந்த 24ஆம் திகதி கைப்பற்றியிருக்கின்றனர். 57ஆவது டிவிசன் துருப்புகள் இந்தப் பகுதியில் முன்னகர்வை மேற்கொண்ட போது புலிகள் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்து விட்டுப் பின்வாங்கியுள்ளனர்.இந்த மோதலில் புலிகளின் 7 சடலங்களையும் 120 மி.மீ மோட்டார் மற்றும் 81மி.மீ மோட்டார்கள் இரண்டு உள்ளிட்ட ஆயுதங்களையும் கைப்பற்றியதாகப் படைத்தரப்பு அறிவித்துள்ளது.

வவுனிக்குளத்தின் மேற்குப்புற அணைக்கட்டு மல்லாவி நகருக்கு தெற்கே சுமார் 3கி.மீ தொலைவில் உள்ள பகுதியாகும். ஏற்கனவே ஒட்டங்குளம் பகுதி யில் நிலைகொண்டிருந்த 573 பிரிகேட் படையினரே தமது கட்டுப்பாட்டுப் பகுதியை கிழக்கே மேலும் விஸ்தரித்திருக்கின்றனர்.படையினரின் முன்னகர்வுக்கு இடமளித்து, வைத்து நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றனர்.சார்க் மாநாட்டை முன்னிட்டு புலிகள் ஒரு புலிகள் பின்னகர்ந்து நெகிழ்ந்து கொடுப்பதால் படையினரால் வேகமாக முன்னேறிச் செல்ல முடிகின்றது.

தற்போது படையினர் மேற்குக் கரையில் வெள்ளாங் குளத்தையும், அங்கிருந்து கிழக்கு நோக்கிய பிரதான வீதியில் துணுக்காய், மல்லாவி பகுதிகளையும் அடுத்து மாங்குளத்தையும் இலக்கு தலைப்பட்சமான போர்நிறுத்தத்தை அறிவித்திருக்கின்ற நிலையில், ராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா அதற்கு முன்னதாகவே, "இந்தக் காலப்பகுதிகளில் வன்னிப் படை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டமாட்டாது. சார்க் பாதுகாப்புக்கு 2000 படையினர் ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். வன்னிக் களத்திலிருந்து படையினர் எவரும் கொழும்புக்கு அழைக்கப்படவோ, படைநடவடிக்ல்க கள் நிறுத்தப்படவோ மாட்டாது' எனத் தெரிவித்திருந்தார். அதன்படியே படையினரின் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

விடத்தல்தீவை அடுத்து இலுப்பைக்கடவையையும் கைப்பற்றியுள்ள நிலையில், படையினர் தற்போது மன்னார் மாவட்டத்தின் எல்லையில் நின்று கொண்டிருக்கின்றனர். இலுப்பைக்கடவையில் இருந்து சுமார் 10கி.மீ தொலைவில் உள்ள வெள்ளாங்குளத்துடன் எல்லை மன்னார் மாவட்டத்தின் முடிவடைந்து கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லை ஆரம்பிக்கிறது.

படையினர் விடத்தல்தீவுக்குத் தெற்கே உள்ள 12 ஆவது மைல் கல்லில் இருந்து கடந்த 15ஆம் திகதி வடக்கு நோக்கிய நகர்வை ஆரம்பித்தனர். தற்போது 22 ஆவது மைல்கல் வரை படையினர் முன்னேறியிருக் கின்றனர். சுமார் 10 மைல் அதாவது சுமார் 16 கி.மீ தூரத்தை வேக நடையில் கடந்திருக்கின்றனர்.

இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் மன்னாரில் இருந்து பூநகரிக்குச் செல்லும் ஏ32 வீதியில் உள்ள வெள்ளாங்குளம் பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை இராணுவத்தினர் முழுமையாகக் கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.

இந்த முன்னேற்றத்தின் மூலம் இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டத்தினுள் பிரவேசித்திருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது. மாங்குளத்திற்கு மேற்கே வவுனிக்குளம் பாலையடி பகுதியில் மல்லாவியை நோக்கி மூன்று முனைகளில் வெள்ளிக்கிழமை காலை முன்னேற முயன்ற இராணுவத்தினரை எதிர்த்து தாங்கள் நடத்திய தாக்குதல்களில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இதேவேளை, வெள்ளாங்குளம் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 10 விடுதலைப் புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

புலிகள் தற்போது களமுனையில் அதிகளவில் 152 மி.மீ, 130மி.மீ, 122மி.மீ ஆட்டிலறிகளையும், 81மி.மீ மோட்டார்களையும் பயன்படுத்துவது குறைந்திருப்பதாக சில தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

புலிகள் இவற்றை வன்னியில் பெரும் தாக்குதலுக்காக ஒதுக் கீடுசெய்திருப்பதால் சிறியளவிலான எதிர்த்தாக்குதல்களுடன் பின்வாங்கிச் செல்வதாகவே கருதப்படுகிறது.

புலிகள் விடத்தல்தீவு, இலுப்பைக்கடவை பகுதிகளை விட்டு பின்வாங்கிய போதே படைத்தரப்புக்கு அவர்கள் பெரும் பாய்ச்சலுக்காகத் தான் பதுங்குகிறார்கள் என்ற சந்தேகம் வந்து விட்டது. இதனால் முன்னரங்க நிலைகளில் உள்ள 57, 58, 62 ஆகிய டிவிசன்கள் அதிகளவில் தற்காப்பில் கவனம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

புலிகளின் அண்மைய நெகிழ்வுத் தன்மைகளை படைத்தரப்பு தவிர்ந்த எவருமே அவர்களின் பலவீனமாக நோக்கவில்லை என்பது முக்கியமானது. அளவுக்கு அதிகமாகப் புலிகள் விட்டுக் கொடுத்துப் பின்வாங்குவது படையினரை வன்னிக்குள்ளே புலிகள் ஜயசிக்குறு ஆழமாக உள்ளே இழுத்துவிட்டு தாக்குவதற்குத்தான் என்றே பலரும் கருதுகின்றனர்.

மன்னாரிலும் வவுனியாவிலும் படையினரன் கட்டு ப்பாட்டுப் பிரதேசங்கள் விரிவடைந்துள்ள அளவுக்கு, அங்கு நிலை கொண்டிருக்கின்ற படையினரின் செறிவு போதுமானதல்ல என்று கருதப்படுகிறது. ஜயசிக்குறு காலத்திலும் இதேபோன்ற நிலை ஏற்பட்ட போது அந்தத் தருணத்தை புலிகள் பதில் தாக்குதலுக்குப் பயன்படுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டமாக மல்லாவி, துணுக்காய் பகுதிகளைக் கைப்பற்றுவதும் ஏ9 வீதியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும் தமது இலக்கு என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.

இராணுவத்தின் 62ஆவது டிவிசன் தற்போது பாலமோட்டை, நவ்வி பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆனால், புலிகள் இந்தக் கள?னைகளில் கடுமையான எதிர்ப்பைக் காண்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இராணுவ வட்டாரங்களிலும் இராணுவ ஆய்வாளர் மட்டங்களிலும் புலிகளின் பாரிய பதில் தாக்குதல் ஒன்று எதிர்பார்க்கப்படுவது உண்மை.

இந்த எதிர்த்தாக்குதல் எப்போது நிகழப் போகிறது என்பது தான் எவருக்கும் தெரியாத புதிராக உள்ளது.

No comments: