உயிலங்குளத்தில் புலிகள் ஊடறுத்து தாக்குவார்கள் !
- அர்ச்சனன்
கிழக்கினை புலிகள் இழந்த போது அவர்கள் வன்னிக்குள் மிகவும் வலிமையாக இருப்பார்கள் என்ற எண்ணப்பாடு எல்லோர் மத்தியிலும் இருந்தது. போர் நிறுத்த கண்காணிப்பு குழுவிற்கு தலைவர்களாக இருந்து விட்டு பதவிகாலம் முடிந்து நாடு திரும்பிய இரண்டு ஸ்கண்டினேவிய நாடுகளை சேர்ந்த போர்நிறுத்த கண்காணிப்பு தலைவர்கள் புலிகளை இலங்கை இராணுவத்தால் வெல்ல முடியாது என்று கூறிவிட்டே சென்றார்கள்.புலிகளின் அதி உயர் பாதுகாப்பு மிக்க முகாம்களை தவிர ஏனைய பிரதேசங்களுக்கு எல்லாம் எந்நேரமும் செல்லக் கூடிய நிலையில் இருந்த போர்நிறுத்த கண்காணிப்பு தலைவர்கள் இவ்வாறு கூறியபோது ஊடகங்களும் இராணுவ ஆய்வாளர்களும் அவர்களின் கருத்தை மேற்காள் காட்டி கட்டுரைகளை வரைந்து இருந்தன. ஆனால் அரச படைகள் இன்று கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லை பகுதியான வேள்ளான்குளம் வரை சென்று இருப்பதுடன் முல்லைதீவு மாவட்டத்திற்கு உள்பட்ட பிரதேசமான மல்லாவிவரை சென்று இருக்கின்றார்கள்.
தமிழகத்தில் இருந்து பெற்றோல் ,குண்டுகள் தயாரிக்கும் பொருட்களை கடத்தி வருவதற்கு ஏற்ற கடற்கரை பிரதேசமாகவும், கடற்படையினர் மீது தாக்குதலை நடத்தி விட்டு கரையேறும் இடமாகவும் இருந்து வந்த விடத்தல் தீவினை புலிகள் விடமாட்டார்கள் என்று புலிகளின் ஆதரவாளர்கள் உட்பட பெரும் பகுதியினர் நம்பி இருந்தனர். ஆனால் அரசபடைகள் அதனையும் தாண்டி கள்ளியடி,இலுப்பக்கடவாய் , முண்டாம்பிட்டி ஆகிய இடங்களை எல்லாம் தாண்டி சென்று வெள்ளான்குளம் சென்று இருக்கின்றார்கள்.
பூனைகரி சங்கு பிட்டி பாதையினை திறந்து யாழ் குடாநாட்டிற்கான தரைவழி பாதையினை திறப்பதோடு பலாலி இராணுவ விமான தளத்திற்கு இருக்கும் ஆபத்தினை நீக்குவதே படையினரின் முன்னேற்திற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றது. பூனைகரியில் இருந்து புலிகள் மூன்றிற்கு மேற்பட்ட தடவைகள் பலாலி விமான தளத்திற்கு எறிகணை தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள். இராணுவ தலமை தளபதி சரத்பொன்சேகாவும், பாதுகாப்பு செயலர் கோத்தாபயவும் பலாலி செல்கின்ற தகவல் அறிந்து புலிகள் பூனைகரியில் இருந்து எறிகணை தாக்குதலை மேற்கொண்டவேளை அவர்கள் சென்ற விமானம் தரையிறங்காது மீண்டும் கொழும்பு திரும்பியிருந்தது.சில நிமிடங்கள் தாமதித்து புலிகள் அந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தால் விமானம் ஓடுபாதையில் எறிகணை தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும். குடாநாட்டிற்கு என இருக்கும் ஒரே விமானதளம் புலிகளின் ஏறிகணைகள் எட்டும் அளவிற்கு இருப்பது என்றுமெ ஆபத்தானது என்பது படையினருக்கு தெரிந்தே இருந்தது. இதனை இல்லாமல் செய்வதும் படைநகர்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது.
மன்னார்- பூனைகரி பாதையூடாக பூனைகரி நோக்கி 58 ஆவது படைப்பிரிவினர் முன்னேறும் அதேவேளை மன்னார் -வவுனியாவிர்கு இடையே நடுப்பகுதியூடாக 57 ஆவது படைப்பிரிவினர் துணுக்காய் , மல்லாவி நோக்கி முன்னேறிய வண்ணம் உள்ளனர். மன்னார் பூனைகரி வீதியோரமாக முன்னேறி வரும் படையினரை புலிகள் ஊடறுத்து தாக்கி விடக்கூடாது என்பதற்காக அதற்கு கிழக்கு புறமாக எ 9 பாதைக்கு மேற்கு புறமாகவும் படையினர் முன்னேறி வருகின்றனர். இதற்கிடையில் புலிகள் தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களை விட்டு மிகவும் விரைவாக பின்வாங்கி செல்வதினால் படையினரை முன்னேற விட்டு பின்னர் ஊடறுத்து தாக்கும் உள்நோக்கத்தில் செயல்படுகின்றார்கள் என்ற ஊகங்கள் பேசப்படுகின்றன. உயிலங்குளம் பகுதிகளில் புலிகள் பாரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக வன்னிக்குள் இருக்கும் மக்களின் மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தகைய ஒரு பயம் படைதரப்பிற்கும் இருப்பதினால் கைப்பற்றிய பிரதேசங்களை பலப்படுத்துமாறு படைதரப்பினை இராணுவ புலனாய்வு துறை எச்சரித்துள்ளது.
ஒரு விடயம் என்னவெனில் விடத்தல் தீவு, இலுப்பக்கடவாய் போல் அல்லாது புலிகள் துணுக்காய், மல்லாவி போன்ற இடங்களில் புலிகள் தமது எதிர்ப்பினை காட்டியுள்ளார்கள். 58 புலிகள் கொல்லப்பட்டதாக அரச தரப்பு தெரிவிக்கின்ற போதும் 20 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. துணுக்காய் , மல்லாவி ஆகிய இடங்களில் கடும் எதிர்ப்பினை காட்டும் புலிகள் மன்னார் - பூனைகரி பாதையின் ஊடாக முன்னேறுகின்ற படையினரை பல்லவராயன் கட்டு வரை முன்னேறும் வரை காத்திருந்து விட்டு உயிலங்குளம் ஊடாக ஊடறுத்து தாக்குவார்கள் என எதிர் பார்க்கலாம். பல்லவராயன் கட்டிலும் புலிகள் படையினரை தடுக்க தவறினால் அவர்கள் பூனைகரி வரை சென்று பூனைகரி சங்ககு பிட்டி பாதையினை திறப்பது தவிர்க்க முடியாததாகி போய்விடும்.சார்க மகாநாட்டிற்காக பெருந்தன்மையாக தன்னிச்சையாக யுத்தநிறுத்தத்தினை அறிவித்த புலிகள் அந்த காலவரையறை முடியும் போது தெற்கில் தற்கொலை தாக்குதல்களையோ அல்லது படையினரின் இலக்குகள் ஏதனையும் இலக்கு வைக்க கூடும். ஆனால் இவைகள் ஏதும் புலிகளுக்கு பெரிதாக உதவப்போவதில்லை, பிரதானமாக படையினரின் நகர்வினை தடுக்கப் போவதில்லை.
புலிகள் தமது ஆதரவாளர்களையும் ,விசுவாசிகளையும் சோர்வடையாது வைத்திருப்பதற்காக பல ஆய்வாளர்கள் எவராலும் சிந்திக்க முடியாத அளவிற்கு சில கதைகளை அவர்கள் மத்தியில் தற்பொழுது கூறி வைத்துள்ளார்கள். இவ் வகையான கதைகளை படிப்பில் பாண்டித்துவம் பெற்ற புலி அனுதாபிகள் நம்பியிருப்பது போல் தெரிகின்றது. கோசோவைப் போல் புலிகள் தனிச்சையான சுதந்திர பிரகடனத்தினை மேற்கொள்வார்கள் என்றும் அதனை தென் ஆபிரிக்காவும்,எதித்திரியாவும் ஆதரிக்கும் எனவும் முன்னர் புலிகள் தமது ஆதரவாளர்கள் மத்தியில் கதைகளை பரவ விட்டு இருந்தார்கள். புலிகள் தற்பொழுது பெருமளவு பிரதேசங்களை இழந்த நிலையில் பல கதைகள் அவர்கள் மத்தியில் மீண்டும் உலாவ விடப்பட்டு இருக்கின்றன. சார்க்(SAARC, South Asia Association for Regional Cooperation) உச்சி மகாநாட்டிற்காக வருகை தந்துள்ள இந்திய பிரதமரின் பாதுகாப்பிற்கென இந்தியாவின் 7 கடற்படை யுத்த கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவைகளில் இரண்டு மன்னார் வளை குடாவிலும் , இரண்டு பாக்கு நீரினையிலும், ஏனையவை தமிழக கடற்கரையோரமாகவும் நிறுத்தப்பட்டுள்ளன. தமது பிரதமரின் பாதுகாப்பிற்கென இந்தியா இவ்வாறு யுத்த கப்பல்களை நிறுத்தி வைத்திருப்பது சார்க் மாகாநாட்டிற்கு வந்திருந்த நாடுகளில் பாகிஸ்தான் உட்பட ஏனைய நாடுகளுக்கு தெற்கிழக்கு பிராந்தியத்தில் தானே வல்லரசு என்பதினை காட்டுவதற்காகவே என சில ஆய்வாளரும், புலிகளுக்கு இது மிரட்டலாகவே இந்தியா இதனை செய்திருக்கின்றது என சில ஆய்வாளரும் கூறியிருக்கின்றார்கள். ஆனால் புலிகள் தமது ஆதரவாளர்களுக்கு இதனை மிகவும் பயன்பட கூடிய வகையில் கூறியுள்ளார்கள். இந்திய பிரதமர் இந்தியாவில் இல்லாத வேளை ,எல்லோரின் கவனமும் சார்க் உச்சி மகாநாட்டின் மீது இருக்குவேளை புலிகள் தமிழகத்தினை கைப்பற்றி வை.கோ அவர்களை தமிழகத்தின் தலைவராக நியமிக்கும் திட்டத்தினை வைத்திருந்தார்கள் என்றும் , இது இந்திய புலனாய்வு துறைக்க்கு எட்டியதினால் யுத்த கப்பல்கள் நிறுத்தப் பட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள். எவ்வளவு ஒரு முட்டாள்தனமான பிரச்சாரம்
புலிகளின் தலமை கூறுவதினை நம்பும் அளவிற்கு அவர்களின் ஆதரவாளர்கள் வளர்க்கப் பட்டிருப்பது வியக்க தக்க ஒரு விடயமாகும். இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையில் மாற்றம் ஏற்படும் என புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளரும் முன்னாள் சிறிலங்கா பொலிசாருமான நடேசன் கூறியிருக்கின்றார். இதில் கூட பல விடயங்கள் உள்ளடங்கி இருப்பதாக புலிகளின் விசுவாசிகள் நம்பு கின்றார்கள்.
தேணி இணையம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment