Thursday, August 7, 2008

பிரபாகரன் கடைப்பிடித்து வரும் மௌனத்தையும் உபாயத்தையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடைப்படித்து வரும் மெளனத்தையும் உபாயத்தையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும் என ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த தேரர் மேலும் கூறியதாவது:

பிரபாகரனின் மெளனம் தொடர்பில் எமக்கு ஏற்கனவே நிறைய அனுபவங்கள் உண்டு. ஆகையால் இவ்விடயத்தில் தீவிர ஆலோசனைகளை நடத்த வேண்டும்.

இதுவரை காலமும் புலிகளின் தலைவர் பிரபாகரனை வெல்லப்பட முடியாத ஒரு அசுரனாக உருவகப்படுத்தியிருந்தனர். ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. தகைமையற்ற தலைமைகளே பிரபாகரனை வெல்ல முடியாதெனக் கூறின.

ஆனால் தற்போது இந்த நாட்டுக்கும் இராணுவத்துக்கும் சரியான தலைமைத்துவம் கிடைத்துள்ளதனால் பிரபாகரனை வெற்றி கொண்டு வருகின்றோம். வடக்கை விரைவில் மீட்டு விடுவோம்.

இலங்கை இராணுவத்துக்குத் தற்போதுள்ள தலைமைத்துவம் தொடர்ந்திருந்தால் புலிகளை மட்டுமல்ல உலக நாடுகளையே வெற்றி கொள்ள முடியுமெனவும் தேரர் மேலும் கூறினார்.

No comments: