ஆண்டான்குளம் மற்றும் மாங்குளம் பிரதேசங்களில் புலிகளின் முக்கிய தலைவர்கள் பயணம் செய்த குண்டு துளைக்காத வாகனங்கள் மீது இராணுவத்தினர் நேற்று நடத்திய தாக்குதலில் வாகனங்களின் ஒன்றின் சாரதி கொல்லப்பட்டுள்ளார் என்றும் புலிகளின் முக்கிய தலைவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.
தப்பி ஓடிய புலிகளின் முக்கியஸ்தர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முக்கியஸ்தர்கள் பயணம் செய்த இரு வாகனங்களையும் அவற்றில் இருந்த ஆயுதங்களையும் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்
இராணுவத்தின் 59ஆவது படைப் பிரிவினர் ஆண்டான்குளம் பகுதியில் மேற்கொண்ட இத்தாக்குதலில்; புலிகளின் முக்கியஸ்தாகள்; பயணித்த வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.
பிரிகேடியர் சத்தியப் பிரிய தலைமையிலான 53ஆவது படைப் பிரிவு மாங்குளம் பகுதியில் மேற்கொண்ட மற்றொரு தாக்குதலில் புலிகளின் இன்னுமொரு வாகனத்துக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலையடுத்து காயமடைந்த தலைவர்களுடன் புலிகள் தப்பி ஓடியுள்ளனர்.
ஆண்டான்குளம் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட வாகனத்தலிருந்து இரண்டு ஆர்.பீ.ஜீ ஆயுதங்கள், எல்.எம்.ஜீ ஆயுதம் ஓன்று, ரீ56 ரக துப்பாக்கிகள் இரண்டு, இரண்டு ஆர்.பீ.ஜீ. குண்டுகள், தகவல் பரிமாறும் வானொலி உபகரணம் ஒன்று ஆகியவற்றை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
No comments:
Post a Comment