ஒட்டுசுட்டான், தெரப்புவெட்டுவான் பகுதியில் புலிகளின் முக்கிய இடங்கள் விமானப் படையினரால் தாக்கியழிக்கப்பட்டதாகப் பாதுகாப்புத் தொடர்பான மத்திய ஊடக நிலையம் தெரிவித்தது.
நேற்றிரவு 10.50 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின் காரணமாகப் புலிகளின் பயிற்சி முகாமுக்குப் பலத்த சேதமேற்பட்டதாக பாதுகாப்புத் தொடர்பான மத்திய ஊடக நிலையம் தெரிவித்தது.
இதே வேளை, ஆண்டான்குளம் பிரதேசத்தில் நேற்றுக் காலை 9.10 மணி முதல் இரவு 7.30 மணி வரை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே பலத்த மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலின் போது புலிகளுக்குப் சேதமேற்பட்டதுடன் படையினர் தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.
அறுபது நிலக்கண்ணி வெடிகள், வெடி கருவிகளையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியதாக பாதுகாப்புக்கான ஊடக நிலையம் மேலும் தெரிவித்தது.
No comments:
Post a Comment