வன்னிப்படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 57வது படையினர் இன்று அதிகாலை முதல் நடத்திய உக்கிரத் தாக்குதலின் பின் ஏ9 வீதியில் அமைந்துள்ள கொக்காவில் பகுதியை கைப்பற்றியுள்ளனர். 18 ஆண்டுகளுக்கு முன் லெப்டினன் சாலிய உபுல் அலதெனிய வின் தலைமையில் கொக்காவிலில் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். 1990 ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதி புலிகள் இந்த முகாமைத் தாக்கினர். இம்முகாம் அப்பகுதியில் தனிமையாக இருந்தனால் உதவிக்கு படையினர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால் முகாமை வாபஸ் பெறும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. லெப்டினன் எஸ் யூ. அலதெனியா தன்னுடன் இருப்பவர்கள் பலர் காயமுற்றுள்ளதால் அவர்களை வெளியே கொண்டுவருவது கடினம் தற்பொழுது முகாமை வாபஸ் பெறுவது சிரமம், ரவைகள், வெடிமருந்துகள் தீந்துவிட்டன என கூறியதுடன் அவருடன் இருந்த தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டது. புலிகள் முகாமை கைப்பற்றினர்.
அன்றைய தினத்துக்குப் பிறகு அதாவது 18வருடங்களுக்கு பிறகு படையினர் இப்பகுதிக்கு சென்றது இதவே முதல் தடவையாகும்.
No comments:
Post a Comment