கிளிநொச்சியை நோக்கிப் படையினர் மூன்று முனைகளில் முன்னோக்கிச் செல்வதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இன்று தெரிவித்தது.
முறிகண்டி,புதுமுறிப்பு,அடம்பன் ஊடாகச் செல்லும் பாதுகாப்புப் படையினர் புலிகளின் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து முன்னேறிச் செல்வதாகவும் ஊடக நிலையம் மேலும் தெரிவித்தது.
இதேவேளை, கிளிநொச்சியை நோக்கிச் செல்லும் இராணுவத்தின் 57 ஆவது படைப் பிரிவு அடம்பன்,அடம்பன் தெற்கு,முறிகண்டி பிரதேசங்களிலிருந்த புலிகளின் அரண்கள், பதுங்கு குழிகள் போன்றனவற்றை முற்றாக நிர்மூலமாக்கியுள்ளனரென்றும் அந்த நிலையம் தெரிவித்தது.
No comments:
Post a Comment