இலங்கையில் தனிநாடு கோரிப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு யுத்த நடவடிக்கைகளுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் சிறுவர்களை தமது இயக்கத்தில் பலாத்காரமாகச் சேர்த்துக் கொள்வதனை உடனடியாக நிறுத்த வேண்டுமென நியூயோர்க்கிலிருந்து இயங்கும் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்ப இன்று (15) விடுத்துள்ள 17 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசிய பிராந்தியத்துககுப்; பொறுப்பான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காகவே தமது அமைப்பு கடந்த 25 வருடங்களுக்கு மேலாகப் போராடி வருவதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தாலும் இவர்களின் யுத்த நடவடிக்கைகளால் வன்னிப் பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அரசாங்கப் படையுடன் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக இவர்கள் இதுவரை காலமும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல பகுதிகளையும் இழந்து வருகின்றன.
வடக்கில் இலங்கை அரசாங்கப் படையினர் முன்னெடுத்து வரும் யுத்த நடவடிக்கை காரணமாக தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது விடுதலைப் புலிகள் அதிகளவு அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர்.
தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலுள்ள மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்வதற்காக அவர்களால் வழங்கப்பட்ட பாஸ் அனுமதி முறையைக் கூடத் தற்போது நிறுத்தி மருத்துவ வசதிகள் தேவைப்படும் பொதுமக்களை மட்டுமே செல்ல அனுமதிக்கின்றனர்.
தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள பொதுமக்கள் சுதந்திரமாக வெளியேறி ஏனைய பகுதிகளுக்குச் செல்ல புலிகள் ஏன் அனுமதிப்பதில்லையெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கீழே உள்ள லிங் ஒன்ரை அழுத்தி மனித உரிமை அமைப்பினர் விடுத்த முழு அறிக்கையையும் பிடிஎவ் (PDF)வடிவில் பார்வையிடலாம்.
http://www.hrw.org/sites/default/files/reports/ltte1208webwcover.pdf
http://www.hrw.org/sites/default/files/reports/ltte1208web.pdf
No comments:
Post a Comment