Monday, March 2, 2009

பெருமூச்சின் பலம்!



பு (ப) லம்பெயர் மண்டுகள்!
ப (நி) லம் போக்கி உழைத்தெடுத்த
பணமெல்லாம் பறித்து வந்து
பொன் மேனி யாள் உன்னை
பொலிவுடன் குளிப்பாட்ட
யாருமில்லாத் தீவினிலே
நானமைத்தேன் குளமொன்று.

தாயகத்துப் பட்டத்து ராணியே!
பளிங்குக் கம்பளத்தில்
மெது மெதுவாய் அடிவைத்து
முன்னேறி வா புள்ள!!
கண்ணி வெடி பொதச்ச இடம்
கணவனுக்கே மறந்து போச்சு.


தமிழின விடிவுக்காய்
போராட நெனச்சித்தான்
இயக்கத்தை தொடங்கினன்.
நாடு விட்டு ஓடிவிட்ட
நம்மவர்தான் பணம்தந்து
நல்லா நீ வாழ் என்றார்.


ஓராயிரம் கரும் புலி
நமக்குக் காவல் இருந்தாலும்…
இதுவெல்லாம் மக்கள் கண்டா – பெரு
மூச்சு விட்டே கொன்னுடுங்கள்
பேசாம வா புள்ள…நாம
கூசாம முழு (மூழ்) கிடுவம்.


-ஏயெம்.ஹஸன் அலி- றியாத் - சவூதி அரேபியா

No comments: