Wednesday, March 26, 2008

13 வயது குழந்தைக்கு முதுமை நோய் ஒவ்வொரு ஆண்டும் ஆறு மடங்கு முதிர்ச்சி

பிராங்க்பர்ட் :அந்த 13 மாத குழந்தைக்கு கொடூரமான முதுமை நோய் வந்துள்ளது. 13 ஆண்டுக்கு மேல் உயிர் வாழ்ந்தால், அதன் அதிர்ஷ்டம் என்கின்றனர்நிபுணர்கள்.

ஜெர்மனியை சேர்ந்த செக் பிக்கார்டு என்ற குழந்தைக்கு இந்த நோய் வந்துள்ளது. இந்த நோய்க்கு பெயர், "ஹட்சின்சன் கில்போர்டு ப்ரோகேரியா சிண்ட்ரோம்' என்று பெயர். பிறந்தவுடன் இந்த நோய் ஆரம்பிக்கும். ஒவ்வொரு ஆண்டும், ஆறு முதல், எட்டு மடங்கு வளர்ச்சி ஏற்படும். உடல் வளர்ச்சியுடன், மூளை வளர்ச்சியும் அதிகரிக்கும்.ஆறு வயது குழந்தை, 30 வயது பெரியவனை போல நடந்து கொள்ளும்; பெரியவர்களுக்கு ஈடாக ஜோக் அடிகும்; வயதுக்கு மீறிய விஷயங்களை பேசும். அறிவுக்கூர்மையும் அதிகமாக இருக்கும்.

ஆனால், இந்த நோய் தாக்கப்பட்ட குழந்தை அதிகபட்சம் 13 வயது வரை தான் உயிர் வாழ முடியும். எட்டு லட்சத்தில் ஒரு குழந்தைக்கு இந்த நோய் வரும். 13 வது வயதில் இந்த குழந்தைக்கு 60 வயதானவர்களுக்கு உள்ள முதிர்ச்சி இருக்கும். மாரடைப்பால் தான் இந்த நோயாளிகள் இறக்கின்றனர்.செக் பிக்கார்டு பிறந்து இரண்டு மாதம் இருந்தபோதே, பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. டாக்டர்களிடம் காட்டியபோது, ஆரம்பத்தில் எதுவும் கண்டுபிடிக்கமுடியவில்லை. சில மாதங்களில், குழந்தையின் நடவடிக்கையை வைத்து, மனோதத்துவ டாக்டர்கள் கண்டுபிடித்து, முழு பரிசோதனை செய்தனர்.

நோய் பாதிக்கப்பட்ட செக் பிக்கார்டு, பெற்றோர் வசதியற்றவர்கள். அதனால், வெப்சைட் மூலம் நன்கொடை திரட்டி வருகின்றனர்.உடலை குறைக்க அறுவை சிகிச்சை செய்தாலும், முதுமை நோயை தடுக்க முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.இப்போதே , 13 மாதத்தில் 10 வயது சிறுவன் போல பிக்கார்ட் தோற்றம் உள்ளது. பெரியவர்களை போல சாப்பிடுகிறான்.இந்த நோய் குறித்து நிபுணர்கள் கூறுகையில், "இந்த நோய் பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.இதற்கு சிகிச்சை என்று எதுவும் கிடையாது. உடல்பருமனை குறைக்க நடவடிக்கை எடுக்கலாம். நோய்க்கு காரணம், "லாமின்' என்ற புரோட்டீன் தான். உடலில் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இனி வரும் காலத்தில் இதற்கு சிகிச்சை கண்டுபிடிக்கலாம்' என்று கூறினர்.

தினமலர்

3 comments:

Unknown said...

குறிப்படப்பட்ட நோய் தொடர்பாக எனக்கு ஒரு அனுபவம் இருக்கிறது. இது தொடர்பாக நான் அந்தக் குழந்தையின் வைத்தியருடன் அல்லது பெற்றோருடன் தொடர்புகொள்ள விரும்புகிறேன். எனது பெயர் எஸ்.சண்முகதாஸன் தொலைபேசி 0049 2581 927965

shan.s@hotmail.de

Anonymous said...

குறிப்பிடப்பட்ட இந்த நோய் தொடர்பாக எனக்கு ஒரு அனுபவம் உள்ளது. இதுதொடர்பாக அந்தப் பிள்ளையின் வைத்தியருடன் அல்லது பெற்றோருடன் தொடர்புகொள்ள விரும்புகிறேன். எனது பெயர் எஸ்.சண்முகதாஸன் தொலைபேசி இல. 0049 2581 927965

mail: shansaaru@gmail.com

Orukanani said...

உங்களின் பதிவிற்கு மிக்க நன்றி. நீங்கள் தமிழ் நாட்டில் இருந்து வெளியாகும்
தினமல்ர் பத்திரிகையுடன் இது சம்பந்தமாக தொடர்புகொள்ளவும்.


நன்றி
ஒரு கணணி